என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே குட்கா கடத்திய 3 பேர் கைது
- 4 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 425 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அஞ்சுவாடி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்குரிய டாட்டா ஏசி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 425 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சேஷல் வாடி பகுதியைச் சேர்ந்த சசிகண்ணன் (வயது46), அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி (28) மற்றும் பெங்களூரைச் சேர்ந்த தனுஷ் (49) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 4 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதற்கு பயன்படுத்திய 1.20 லட்சம் மதிப்புள்ள டாட்டா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






