என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயபிரகாஷ்
உத்தனப்பள்ளி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி
- இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
- மின்னல் தாக்கி அவர் விழுந்து இறந்து கிடந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அருகே பி.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது50). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுமதியம் ஜெயபிகாஷ் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தீவனம் எடுக்க சென்றார்.
அந்த சமயம் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் மின்னல் தாக்கி அவர் விழுந்து இறந்து கிடந்தார்.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story