என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே துணிகரம்: கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.6.5 லட்சம் பணம் கொள்ளை
- ஊருக்கு சென்று விட்டு திரும்பிய சுதாகர் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை திருடு போனதை கண்டு சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் சரகம் கொல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 39).கட்டிட ஒப்பந்ததாரர். இவர் தனது மனைவி சுவேதா மற்றும் மகளுடன் வீட்டை பூட்டிக்கொண்டு தனது காரில் ஓசூர் சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் சுதாகரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டிற்குள் ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்த அந்த ஆசாமிகள் அதிலிருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6,50 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஊருக்கு சென்று விட்டு திரும்பிய சுதாகர் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை திருடு போனதை கண்டு சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.






