என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்காரப்பேட்டை பகுதியில் நூதன முறையில் இருசக்கர வாகனம் திருட்டு சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பு
- இனிப்புகள் 10 கிலோ ஆர்டர் செய்துவிட்டு அதற்கு உரிய தொகையை அளிக்கும்பொழுது ரூ.1000 குறைவாக உள்ளது என கூறினார்.
- பேக்கரிக்காரரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சென்ற நபர் திரும்ப வரவில்லை.
சிங்காரப்பேட்டை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் நூதன முறையில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ள சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேமராவில் சிக்கி உள்ள நபர் ஏற்கனவே மாமிச கடைக்கு சென்று விழாவிற்கு ஒன்றிற்கு மாமிசம் வேண்டும் என கூறி 20 கிலோ மாமிசத்தை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த மாமிச கடை உரிமையாளரின் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு வீட்டில் விசேஷம் நடைபெற்று வருகிறது.
அதற்கு இனிப்புகள் வாங்க எந்த கடை நன்றாக இருக்கும் என்று கேட்டுள்ளார். கேட்டு விட்டு 20 கிலோ மாமிசத்தை தயார் செய்து வைக்க சொல்லி கூறிவிட்டு பிறகு பேக்கரிக்கு வந்துள்ளார். அங்கு இனிப்புகள் 10 கிலோ ஆர்டர் செய்துவிட்டு அதற்கு உரிய தொகையை அளிக்கும்பொழுது ரூ.1000 குறைவாக உள்ளது.
அந்த பணத்தை எடுத்து வர ஏ.டி.எம். சென்டருக்கு செல்ல வண்டி இரவல் தர வேண்டும் என்று பேக்கரிக்காரரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சென்ற நபர் திரும்ப வரவில்லை. இதில் ஏமாற்றம் அடைந்த பேக்கரி உரிமையாளர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்துசி.சி.டி.வி. காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






