என் மலர்
நீங்கள் தேடியது "தார் சாலை- கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி"
- 4 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
- அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அசோக்குமார், பூமி பூஜைகள் செய்து சாலை அமைக்கும் பணியையும், கால்வாய் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி ஊராட்சி, நெக்குந்தியான் கொட்டாய் கிராமத்தில், சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 120 மீட்டர் தொலைவிற்கு, 4 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
அதே போல், சோக்காடி ஊராட்சி கருத்தமாரம்பட்டி கிராமத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இந்த இரண்டு பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அசோக்குமார், பூமி பூஜைகள் செய்து சாலை அமைக்கும் பணியையும், கால்வாய் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவர் அம்சா ராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்சாயத்து தலைவர் கொடிலா ராமலிங்கம், துணைத் தலைவர் ஜெயபால், வார்டு உறுப்பினர் கோவிந்தராஜ், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தன், ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன், காட்டிநாயனப்பள்ளி துணைத் தலைவர் நாராயணகுமார், கிளை செயலாளர் பவுன், முன்னாள் ஊராட்சி செயலாளர் செவத்தான், கார்த்திக் பால்ராஜ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






