என் மலர்
கிருஷ்ணகிரி
- வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ்.
- இன்னும் சில மாவட்டத்தில் வென்றிருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்திருக்கும்.
சூளகிரி:
அதிமுக 51ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கிளை செயலாளராக இருந்து தற்போது பொறுப்பிற்கு வந்து உள்ளேன். அதனால் ஒரு ஒரு பொறுப்பாளருக்கு என்ன கஷ்டம் என்பது எனக்கு நன்கு புரியும். 10 முறை அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். சட்டமன்றத்தின் வெளியில் வந்து சட்டையை கிழித்து கொண்டு ஸ்டாலின் சாலையில் அமர்ந்தார். அவர் சட்டையை யாரும் தொடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ்., எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது. வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ். அடுத்து வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெல்லும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெல்லும்.
நாம் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி சட்டமன்ற தொகுதிகளை வென்றுள்ளோம். ஒரு சில மாவட்டத்தில் வென்று இருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்து இருக்கும். சற்று உழைப்பு குறைவாக இருந்த காரணத்தால் இன்று ஸ்டாலின் முதல்வராகிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- நேற்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த தனது கணவரை மனைவி கண்டித்துள்ளார்.
- மனமுடைந்து காணப்பட்ட ரமணா விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள அருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமணா (வயது40). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் நேற்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த தனது கணவரை மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ரமணா விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ரமணா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
- விழாவில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
கிருஷ்ணகிரி,
அ.தி.மு.க. கொடியேற்று விழா அ.தி.மு.க. பொன் விழா நிறைவு பெற்று 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
சூளகிரி பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.
விழாவில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதனால் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பேனர்கள், கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளது. சூளகிரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
- குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்கறிப்பில் கூறியிருப்பதாவது:-
குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்சாரம் வினியோகிக்கப்படும் குருபரப்பள்ளி, குப்பச்சி ப்பாறை, விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்த னப்பள்ளி, ஜூனூர் ஜிஞ்சுப்பள்ளி, சின்ன கொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி,
நாச்சிகுப்பம், அரசு மருத்துவ கல்லூரி, இ.ஜி.புதூர், சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்க வரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, பேடப் பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகரசனப்பள்ளி மற்றும் பங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கும், அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெருமாள் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
- இதில் ஊர் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் பெருமாள் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இதில் ஊர் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா வானது அனைவரின் வேண்டுதலின் பேரில் காணிக்கைகள் செலுத்தி கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இக்கோவிலுக்கு வந்த அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. விழா விற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் கவுண்டர் (பெரிய மாணிக்கம், சின்ன மாணிக்கம், ராகவன், சின்னகுட்டி, திருவூர், முருகன், முனிராஜ், திருப்பதி, கோவில் பூசாரி, பெரிய பாண்டியன்) ஆகியோர் செய்து உள்ளனர்.
- நேற்று ஜிலான் பிளாஸ்டிக் பைப் எடுத்து ஆசியாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
- மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஜிலானை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள வாலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாப்பிரகான். இவரது மகன் ஜிலான் (வயது25). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பாபு. இவரது மனைவி ஆசியா (48). இவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று ஜிலான் பிளாஸ்டிக் பைப் எடுத்து ஆசியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஆசியா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஜிலானை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- வீட்டில் காதல் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
- மனமுடைந்து காணப்பட்ட விக்னேஸ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ். இவரது மகன் விக்னேஸ் (வயது18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவர் குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஸ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்ப்பேட்டை என்ற பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மகேந்திரன் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை மாவட்டம், திருவதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது தேர்ப்பேட்டை என்ற பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மகேந்திரன் உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைரமங்கலம் ஜங்ஷன் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
- இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓசூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் திலீப்குமார் ஜான் (34) மற்றும் ஜெகதேவ் ராவுத்(34). இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே குடிசாகனபள்ளியில் தங்கியிருந்து தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைரமங்கலம் ஜங்ஷன் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில், அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தருமபுரி மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்த சிவப்பிரகாஷ்(21) என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
- கடந்த 2020-ம் ஆண்டு திருமண செய்து வைத்துள்ளனர்.
- நவீன்குமார், அருண்குமார் 2 பேரையும் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே யுள்ள கணபதி நகரை சேர்ந்த 17 வயது பெண் ,நவீன்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இது அவரது பெற்றோருக்கு தெரிய வரவே அருண்குமார் என்பவருடன் கடந்த 2020-ம் ஆண்டு திருமண செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே அந்த பெண்ணை காதலித்த நவீன்குமார் அவரை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமார், அருண்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
- கொடியேற்று விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
- தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அ.தி.மு.க. பொன் விழா நிறைவு பெற்று 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
சூளகிரி பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரு மான கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.
விழாவில் தமிழ்நாடு சட்ட சபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்ச ருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி விழா பேருரை யாற்றுகிறார்.
எனவே கட்சியின் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
- கிரஷர் லாரிகளை கொரட்டகிரி சாலை வழியாக செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிரஸர் ஓனர்ஸ் பெடரேஷன் அமைப்பினர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமையில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெ.காருப்பள்ளி - தேன்கனிக்கோட்டை சாலையில், 5-க்கும் மேற்பட்ட ஜல்லி கிரஷர் யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இங்கு, 1,500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இப்பகுதியிலிருந்து வரும் கிரஷர் லாரிகளை கொரட்டகிரி சாலை வழியாக செல்ல அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கிரஷர் யூனிட் உரிமையாளர்கள் போட்ட சாலையில் செல்லக்கூடாது என கூறுவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதேபோல, 2005, பிப்ரவரி 9-ந் தேதி அமைக்கப்பட்ட கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி யில் பகல் கொள்ளை நடக்கிறது. தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகளில், 22 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக தமிழக அரசு உறுதியளித்த நிலையில் செயல்படுத்தவில்லை.
சேலம்- சென்னை ஆறுவழிச்சாலை, 20 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் அதை தமிழக அரசு தடுக்கும் போது, சுங்கச்சாவடிகளை அகற்ற ஏன் நடவடிக்கை இல்லை.
கிருஷ்ணகிரி சுங்கச்சா வடிக்கு வசூலாக வேண்டிய, 400 கோடி ரூபாய்க்கு, 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட நிலையிலும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அகற்றப்படவில்லை. இதை தமிழக அரசு தடுக்க வேண்டும். பா. ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் டீசல் விலை குறைவாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






