என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே கார் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி
- பைரமங்கலம் ஜங்ஷன் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
- இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓசூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் திலீப்குமார் ஜான் (34) மற்றும் ஜெகதேவ் ராவுத்(34). இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே குடிசாகனபள்ளியில் தங்கியிருந்து தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைரமங்கலம் ஜங்ஷன் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில், அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தருமபுரி மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்த சிவப்பிரகாஷ்(21) என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.






