என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரியில், நாளை அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றுகிறார் -மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ.அறிக்கை
- கொடியேற்று விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
- தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அ.தி.மு.க. பொன் விழா நிறைவு பெற்று 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
சூளகிரி பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரு மான கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.
விழாவில் தமிழ்நாடு சட்ட சபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்ச ருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி விழா பேருரை யாற்றுகிறார்.
எனவே கட்சியின் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






