என் மலர்
கிருஷ்ணகிரி
- பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.
- கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள காட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (வயது 42). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.
இந்நிலையில் திருப்பதி யும் அவரது மனைவி புவனேஸ்வரியும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த தருமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ
மனையில் அனும திக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தருமன் கொடுத்த புகாரின்பேரில் வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து திருப்பதி, புவனேஸ்வரி 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- பேரண்டப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மொஹிதீன் ஜின்னா, முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேரண்டப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த காரில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 190 கிலோ எடையுள்ள அந்த பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி வந்த நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மொஹிதீன் ஜின்னா, முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
ரூ.95 ஆயிரத்து 550 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஊத்தங்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி 4 யூனிட் கற்களை டிப்பர் லாரியில் கடத்தி சென்ற அரூர் பாப்பநாயக்கன்வலசை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(35) என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
- உறைவினார்கள் வந்து சமரசம் செய்து வைப்பார்களாம்.
- டி.எஸ்.பி.அமலா அட்வின் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே யுள்ள சப்பாணிப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர்.இருசக்கர வாகன மெக்கானிக் பட்டறை வைத்துள்ளார்.இவரது மனைவி பவித்ரா (வயது 21).
இவர்களுக்கு திருமண மாகி 2 வருடங்கள் ஆகிறது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.அவ்வப்போது உறைவினார்கள் வந்து சமரசம் செய்து வைப்பார்களாம்.
நேற்று மீண்டும் இதேபோல தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுதாகர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.அப்போது பவித்ரா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து பவித்ராவின் தந்தை குமரன் தந்த புகாரின்பேரில் காவேரிபட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 2 வருடத்திற்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் டி.எஸ்.பி.அமலா அட்வின் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
- அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
- நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
ஓசூர்,
மத்திய அரசின் உறுதிமொழிக்குழுவின் தலைவராக, முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செய லாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி நேற்று ஓசூரில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், மேற்கு மாவட்ட துணை செயலாளர் கே.மதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலா ளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்னகிருஷ்ணன், வட்ட செயலாளர் குபேரன் என்ற சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தம்பிதுரைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- மாபெரும் கல்விக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.
- அறிவியல் துறை கண்டுபிடிப்புகள் தொழில் நுட்ப மாதிரிகளும் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் ஸ்பெக்ட்ரா என்னும் தலைப்பில் மாபெரும் கல்விக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.
கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். பள்ளியின் துணை முதல்வர் மஞ்சுளா முன்னிலை வகிக்க கல்விக் கண்காட்சியை தனியார் பள்ளியின் மாவட்ட கல்வி அலுவலர் முனிமதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாணவிகள் வரவேற்பு நடனத்துடன் கண்காட்சி தொடங்கியது. செயற்கை நுண்ணறிவியல், வணிகம் தமிழ், ஆங்கிலம், அறிவியல், அறிவியல், கணினி கணிதம், சார்ந்த அறிவியல் துறை கண்டுபிடிப்புகள் தொழில் நுட்ப மாதிரிகளும் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. பெற்றோர் பொதுமக்கள், மாணவியர் பார்வை யிட்டனர்.
கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் துணை முதல்வர் மஞ்சுளா மற்றும் அனைத்து துறை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து செய்திருந்தனர்.
- உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த்திடம் மனு ஒன்றை அளித்தனர்.
- சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் தலைமையாசிரியையாக பணி புரிந்து வருபவர் தர்மசம்வர்த்தினி. இந்த நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக கீழ்த்தரமாகவும், தனது பள்ளி மேம்பாட்டு செயல்பாடுகளை தவறாகவும்,பொய்யாகவும் சித்தரித்து ஒரு நபர் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட நபர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மசம்வர்த்தினி மனு அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த தலைமையாசிரியைக்கு ஆதரவாக நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ராதா, குமார் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் நேற்று ஓசூர் ஏ.எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு சென்று, உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த்திடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் தலைமையாசிரியை தர்மசம்வர்த்தினி குறித்து கீழ்த்தரமாகவும் அவரது பள்ளி பணிகளை பாதிக்கும் வகையிலும் பொய்யாக வீடியோ பரப்பி வரும் நபர் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ஹைதராபாத்தை சேர்ந்த ரமேஷ் சந்திரபாபு.
- சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.
ஓசூர்:
கின்னஸ் சாதனைக்காக ஹைதராபாத்தில் இருந்து 72 வயது முதியவர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த ரமேஷ் சந்திரபாபு (வயது72), என்ற அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை கடந்த 10.09.2022 அன்று ஹைதராபாத்தில் தொடங்கினார்.
தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த அவர் கடந்த புதன்கிழமை இரவு ஓசூர் வந்தார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து 55 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று ஓசூரிலிருந்து கர்நாடகம் புறப்பட்ட அவர், கர்நாடகா வழியாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தனது லட்சியத்தை அடையப்போவதாக உறுதியுடன் தெரிவித்தார். சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.
- கண்ணன்ட அள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் முருகவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- இறந்து கிடந்த முருகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கூச்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 49). இவர் கண்ணன்ட அள்ளி பகுதியில் மதுக்கடை பார் நடத்தி வந்தார். இவரது மனைவி காயத்ரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று இரவு பாரை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.
இந்த நிலையில் கண்ணன்ட அள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் முருகவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இறந்து கிடந்த முருகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவரும் மோட்டார் சைக்கிளில் முகல்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- அவ்வழியாக வந்த ஒரு டிராக்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி
ஓசூர் அருகேயுள்ள குன்னகானபள்ளி பகுதியை சேர்ந்த ராஜப்பா என்பவரது மகன் பிரேம்குமார் (வயது 15).அதே பகுதியை சேர்ந்த முனிரெட்டி என்பவரது மகன் ராகவேந்திரா (18).
இருவரும் மோட்டார் சைக்கிளில் முகல்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த ராகவேந்திரா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர்.
- அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் போலீசார் ஒண்டுக்குடிக்கை வன பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் தொட்டகாரபள்ளி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், வெங்கடேஷ், ரோஷன், முருகன் என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள்,ரூ.400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- கண்ணன்ட அள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் முருகவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- இதனை பார்த்த அந்த வழியாக ெசன்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கூச்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 49). இவர் கண்டன்னஅள்ளி பகுதியில் மதுக்கடை பார் நடத்தி வந்தார். இவரது மனைவி காயத்ரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று இரவு பாரை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.
இந்த நிலையில் கண்ணன்ட அள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் முருகவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இறந்து கிடந்த முருகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காளி கோவில் முன்பாக கனிம வளத்துறை அதிகாரி பொன்னுசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அனுமதியின்றி லாரியில் கிரானைட் கடத்தி வந்த ஜெய சாம்ராஜ்குமார்(வயது 45) என்பவரை பிடித்து கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள தாசரிப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளி கோவில் முன்பாக கனிம வளத்துறை அதிகாரி பொன்னுசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு அனுமதியின்றி லாரியில் கிரானைட் கடத்தி வந்த ஜெய சாம்ராஜ்குமார்(வயது 45) என்பவரை பிடித்து கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த கடத்தலில் தொடர்புடைய கமலநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.






