என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சாலைகள் சிதலமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலைக்கு மாறி உள்ளது
    • இன்றும் 2-ம் நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தை சுற்றிலும் 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளிலிருந்து டிப்பர் லாரிகளில் எம் சாண்ட், ஜல்லி கற்களை ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த லாரிகள் கொரட்ட கிரி கிராமத்தின் வழியாக சென்று வருவதால் சாலைகள் சிதலமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலைக்கு மாறி உள்ளது

    மேலும் புழுதி பறப்பதால் வீடுகளுக்குள் தூசி படிந்து வருகிறது இதனால் அப்பகுதி கிராம மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுகின்றனர். இதனால் ஊருக்குள் லாரிகள் வருவதை கண்டித்தும் அதனை கட்டுப்படுத்த கோரியும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் தலைமையில் பலமுறை சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும் தொடர்ந்து ஊருக்குள் டிப்பர் லாரிகள் வந்து. செல்வது வாடிக்கையாக உள்ளது வேகமாக இயக்கப்படும் லாரிகளால் மக்கள் அவதிக்குள்ளாக வருகின்றனர் மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் நிலை காணப்படுகிறது.

    இந்நிலையில் லாரிகள் ஊருக்குள் வந்த செல்வது அதிகாரிகள் தடுக்காததை கண்டித்து கிராம மக்கள் 150 க்கு மேற்பட்டோர் கடந்த வாரம் 2ஆம் தேதி தங்களது வீடுகளை காலி செய்து மூட்டை முடிச்சுகளுடன் கால்நடைகள் மற்றும் தங்களது குழந்தைகள் அழைத்து கொண்டு ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த புறப்பட்டனர். அவர்களை எஸ். முதுகானப்பள்ளி அருகே மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் அப்பொழுது கூடிய விரைவில் சமரசக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் சமாதான கூட்டத்தில் தீர்வு எட்டப்படாததால் நேற்று வழக்கம் போல் ஊருக்குள் லாரிகள் வந்து சென்றன.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்ய முடிவு செய்து 150 -க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகள் மற்றும் கால்நடைகளை அழைத்து கொண்டு மூட்டை முடிச்சுடன் தேன்கனிக்கோட்டை தாலுக்கா அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஊருக்குள் அருகே சாலையோரம் புறம்போக்கு நிலத்தில் குடிசைகள் அமைத்து அனைவரும் தங்கினர். கொட்டும் மழையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த தகவல் பேரில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவண மூர்த்தி, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ், தலைமையிலான போலீசார் அங்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் இரவு முழுவதும் கொட்டும் மழையிலும் குடிசைகளில் தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் இன்றும் 2-ம் நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு போலிசார் மற்றும் தியனைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

    • கழிவு நீர் உறிஞ்சி தளம், ரூ. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது.
    • இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த பாலேப்பள்ளி ஊராட்சி சூரன்குட்டை கிராமத்தில், ஆதிதிராவிடர் காலனியில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில், கழிவு நீர் உறிஞ்சி தளம், ரூ. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சேகர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெசிந்தா வில்லியம், துணை தலைவர் மாரம்மாள் சின்னசாமி, ஊர் கவுண்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நவீன முறை சலவையகம் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
    • பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, நவீன சலவையகங்கள் அமைத்திட மேற்கண்ட இன மக்கள் 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர், மிகப்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பப் படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விணண்ணப்பங்கள், சென்னை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.

    இதில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.

    10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்.11) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.
    • பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

    இந்த மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டார். இந்த முகாமில், பொது மருத்துவம், நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய், தோல், இருதயம், காது, மூக்கு, தொண்டை, கண் நோய், மகளிர், ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள், இசிஜி பரிசோதனை, சளி பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள், உயர் சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரமேஷ்குமார், தொற்றாநோய் அலுவலர் டாக்டர்.திருலோகன், டாக்டர்கள் சுசித்ரா, செல்வி, விமல்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தமிழ்வாணன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ராமச்சந்திரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே கனகமுட்லு கிராமத்தில், மகா கணபதி, சன்யாசி மாரியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 9&ந் தேதி மாலை கணபதி பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதல், தீபாராதனை ஆகியவை நடந்தன.

    10-ந் தேதி மாலை யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தன. நேற்று காலை 2-ம் கால யாக பூஜை, கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாரியம்மன், சன்யாசி மாரியம்மன், மகா கணபதி கோவில் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு தனியார் நிறுவனத்தில் லோடு பெற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.
    • டிரைவர் போலி ஆவணங்கள் கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (52). இவர் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-8-2022 அன்று ஒரு லாரி டிரைவர் அவரிடம் வந்து தனது லாரிக்கு லோடு கேட்டார். இதனைத்து அவரிடம் செல்வகுமார் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லோடு பெற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.

    பின்னர் அந்த லாரி டிரைவர், தனியார் கம்பெனி யிருந்து ரூ.15 லட்சத்து 33,304 மதிப்பிலான 19.5 டன் இரும்புக் குழாய்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அந்த இரும்புக்குழாய்கள் லோடு, திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டியது ஆகும். ஆனால் இதுநாள் வரை, அந்த டிரைவர் இரும்பு குழாய் லோடை, அங்கு ஒப்படைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி யடைந்த செல்வகுமார், சம்பந்தப்பட்ட டிரைவர் போலி ஆவணங்கள் கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.

    இது குறித்து அவர் நேற்று ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.இச்சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எதிரே வந்த கண்டைனர் லாரி மீது கார் மோதி நசுங்கியது
    • இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்

    சூளகிரி,

    ஒசூர் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு செல்ல முடிவு செய்த காந்தி நேற்று இரவு தனது மனைவி நவநீதா (40),குழந்தைகள் பிரதீபாஸ்ரீ,கோகுலன் ஆகியோருடன் வாடகை காரில் புறப்பட்டுள்ளார்.

    காரை ஓசூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தினேஷ்(32) என்பவர் ஓட்டி சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பள்ளி என்ற இடத்தருகே சென்றபோது திடீரென கார் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது. அப்போது எதிரே வந்த கண்டைனர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.

    இதில் கார் டிரைவர் தினேஷ்,காந்தியின் மனைவி நவநீதா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.காந்தி மற்றும் குழந்தைகள் ஆகிய 3 பேரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.

    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர்.

    இடிபாடுகளில் சிக்கிய காந்தி,பிரதீபாஸ்ரீ ,கோகுலன் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜே.சி.பி.எந்திரம் விபத்தில் சிக்கிய காரை சாலையிலிருந்து அகற்றினர்.

    இந்த விபத்தால் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • மருத்துவ படிப்பில் இடம் பெற உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை வாழ்த்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி அபிராமி பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மாணவிக்கு பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கி பேசினார். அவர் பேசும் போது கால்நடை மருத்துவ படிப்பில் நன்றாக படித்து பல்கலைக்கழக அளவில் சாதித்திட வேண்டும் என்றார். மேலும் மாணவி கால்நடை மருத்துவ படிப்பில் இடம் பெற உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை வாழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் பாரத் கல்வி குழுமங்களின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் செயலாளர் டாக்டர் சந்தோஷ், பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது.
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.

    சூளகிரி:

    ஓசூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு செல்ல முடிவு செய்த காந்தி நேற்று இரவு தனது மனைவி நவநீதா (40), குழந்தைகள் பிரதீபாஸ்ரீ, கோகுலன் ஆகியோருடன் வாடகை காரில் புறப்பட்டுள்ளனர்.

    காரை ஓசூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தினேஷ்(32) என்பவர் ஓட்டி சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பள்ளி என்ற இடத்தருகே சென்றபோது திடீரென கார் டயர் வெடித்தது.

    இதில் நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.

    இதில் கார் டிரைவர் தினேஷ், காந்தியின் மனைவி நவநீதா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காந்தி மற்றும் குழந்தைகள் ஆகிய 3 பேரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.

    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இடிபாடுகளில் சிக்கிய காந்தி, பிரதீபாஸ்ரீ, கோகுலன் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜே.சி.பி.எந்திரம் விபத்தில் சிக்கிய காரை சாலையிலிருந்து அகற்றினர்.

    இந்த விபத்தால் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • கல்விச் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றுணர்ந்து பல்வேறு வகையில் சேவையை செய்து வருகிறது.
    • ரூ.6.1 லட்சம் மதிப்பிலான ஊக்கப்பரிசுகளை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் ஏழை, எளிய மகளிர் நலனில் பெரும் அக்கறை கொண்டுள்ளதுடன், கல்வி வளர்ச்சியால் மட்டுமே சமுதாயத்தில் கல்விச் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றுணர்ந்து பல்வேறு வகையில் சேவையை செய்து வருகிறது.

    சிறப்புற்று அவ்வகையில் 200 ஆண்டு காலமாகக் கல்விப்பணியில் விளங்கி வரும் சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத் துறையில் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் வகையிலும், மேலும் பள்ளி அளவில் அனைத்து கலைநிகழ்ச்சிகளிலும், விளையாட்டுகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் 19 மாணவர்களுக்கு தலா ரூ.10,000-மும், 2 மாணவர்களுக்கு தலா ரூ.5,000- மும் என மொத்தம் 21 மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகையை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    மேலும் பள்ளியின் தலைமையாசிரியர் சூசை அலங்காரம் இக்கல்வி உதவித்தொகை மாணவர்களின் கல்விக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பேருதவியாக இருக்கும் என தெரிவித்து, ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

    ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஐ.வி.டி.பி நிறுவனர் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துவதற்காகவே இத்தொகையை வழங்கியதாக தெரிவித்தார்.

    இதுவரை இப்பள்ளியின் பணியாளர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.6.1 லட்சம் மதிப்பிலான ஊக்கப்பரிசுகளை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    • சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பேச்சுப் போட்டியும்,கட்டுரைப் போட்டியும் மாணவர்க ளுக்கு இடையே நடை பெற்றது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் முதல்வர் .தனபால் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி தலைவர் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற மன்றத்தின் நீதிபதி வேல்முருகன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி சிறப்பு மாவட்ட நீதிபதி மற்றும் மோட்டார் வாகன தீர்ப்பாயம் நீதிபதி அமுதா ,கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர்கள் கருணா கரன், சபி சபிக் அகமது ,மாவட்ட உரிமையியல் நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா, செயலாளர் தலைமை குற்றவியல் நீதிபதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ராஜசிம்மவர்மன், கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிபதி கே .ஆர். லீலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    சட்டத்துறை விழிப்பு ணர் விழாவில் சுதந்திர இந்தியாவில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு குறித்த பேச்சுப் போட்டியும்,கட்டுரைப் போட்டியும் மாணவர்க ளுக்கு இடையே நடை பெற்றது.

    வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான ஜெகன், இராமமூர்த்தி, ஸ்டீபன் விக்டர் ஆண்டனி ஏற்பாடு செய்திருந்தனர். மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ்குமார் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

    விழாவின் நிறைவாக கிருஷ்ணகிரி மாவட்ட தன்னார்வலர் இயக்குநர் ஜலாலுதீன் நன்றி கூறினார்.

    • மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.

    ஓசூர்,

    கின்னஸ் சாதனைக்காக ஹைதராபாத்தில் இருந்து 72 வயது முதியவர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    ஹைதராபாத்தை சேர்ந்த ரமேஷ் சந்திரபாபு(72), என்ற அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை கடந்த 10.09.2022 அன்று ஹைதராபாத்தில் தொடங்கினார். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கேரளா வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த அவர் கடந்த புதன்கிழமை இரவு ஓசூர் வந்தார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து 55 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    நேற்று ஓசூரிலிருந்து கர்நாடகம் புறப்பட்ட அவர், கர்நாடகா வழியாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தனது லட்சியத்தை அடையப்போவதாக உறுதியுடன் தெரிவித்தார். சாதனை புரிவதற்கு வயது, ஒரு தடையல்ல என்பதை ரமேஷ் சந்திரபாபு நிரூபித்து வருகிறார்.

    ×