என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி  மாணவர்களின் விளையாட்டு திறனை   மேம்படுத்த ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை  -ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கியது
    X

    உதவித்தொகையை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை -ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கியது

    • கல்விச் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றுணர்ந்து பல்வேறு வகையில் சேவையை செய்து வருகிறது.
    • ரூ.6.1 லட்சம் மதிப்பிலான ஊக்கப்பரிசுகளை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் ஏழை, எளிய மகளிர் நலனில் பெரும் அக்கறை கொண்டுள்ளதுடன், கல்வி வளர்ச்சியால் மட்டுமே சமுதாயத்தில் கல்விச் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றுணர்ந்து பல்வேறு வகையில் சேவையை செய்து வருகிறது.

    சிறப்புற்று அவ்வகையில் 200 ஆண்டு காலமாகக் கல்விப்பணியில் விளங்கி வரும் சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத் துறையில் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் வகையிலும், மேலும் பள்ளி அளவில் அனைத்து கலைநிகழ்ச்சிகளிலும், விளையாட்டுகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் 19 மாணவர்களுக்கு தலா ரூ.10,000-மும், 2 மாணவர்களுக்கு தலா ரூ.5,000- மும் என மொத்தம் 21 மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகையை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    மேலும் பள்ளியின் தலைமையாசிரியர் சூசை அலங்காரம் இக்கல்வி உதவித்தொகை மாணவர்களின் கல்விக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பேருதவியாக இருக்கும் என தெரிவித்து, ஐ.வி.டி.பி நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

    ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு பேசிய ஐ.வி.டி.பி நிறுவனர் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துவதற்காகவே இத்தொகையை வழங்கியதாக தெரிவித்தார்.

    இதுவரை இப்பள்ளியின் பணியாளர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.6.1 லட்சம் மதிப்பிலான ஊக்கப்பரிசுகளை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×