என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூரன்குட்டையில்   ரூ.7 லட்சத்தில் கழிவுநீர் உறிஞ்சிதளம் அமைக்க பூமிபூஜை
    X

    சூரன்குட்டையில் ரூ.7 லட்சத்தில் கழிவுநீர் உறிஞ்சிதளம் அமைக்க பூமிபூஜை

    • கழிவு நீர் உறிஞ்சி தளம், ரூ. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது.
    • இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த பாலேப்பள்ளி ஊராட்சி சூரன்குட்டை கிராமத்தில், ஆதிதிராவிடர் காலனியில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில், கழிவு நீர் உறிஞ்சி தளம், ரூ. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் கிருஷ்ண கிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சேகர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெசிந்தா வில்லியம், துணை தலைவர் மாரம்மாள் சின்னசாமி, ஊர் கவுண்டர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×