என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் தஞ்சம்"

    • சாலைகள் சிதலமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலைக்கு மாறி உள்ளது
    • இன்றும் 2-ம் நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தை சுற்றிலும் 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளிலிருந்து டிப்பர் லாரிகளில் எம் சாண்ட், ஜல்லி கற்களை ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த லாரிகள் கொரட்ட கிரி கிராமத்தின் வழியாக சென்று வருவதால் சாலைகள் சிதலமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலைக்கு மாறி உள்ளது

    மேலும் புழுதி பறப்பதால் வீடுகளுக்குள் தூசி படிந்து வருகிறது இதனால் அப்பகுதி கிராம மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுகின்றனர். இதனால் ஊருக்குள் லாரிகள் வருவதை கண்டித்தும் அதனை கட்டுப்படுத்த கோரியும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் தலைமையில் பலமுறை சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும் தொடர்ந்து ஊருக்குள் டிப்பர் லாரிகள் வந்து. செல்வது வாடிக்கையாக உள்ளது வேகமாக இயக்கப்படும் லாரிகளால் மக்கள் அவதிக்குள்ளாக வருகின்றனர் மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் நிலை காணப்படுகிறது.

    இந்நிலையில் லாரிகள் ஊருக்குள் வந்த செல்வது அதிகாரிகள் தடுக்காததை கண்டித்து கிராம மக்கள் 150 க்கு மேற்பட்டோர் கடந்த வாரம் 2ஆம் தேதி தங்களது வீடுகளை காலி செய்து மூட்டை முடிச்சுகளுடன் கால்நடைகள் மற்றும் தங்களது குழந்தைகள் அழைத்து கொண்டு ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த புறப்பட்டனர். அவர்களை எஸ். முதுகானப்பள்ளி அருகே மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் அப்பொழுது கூடிய விரைவில் சமரசக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் சமாதான கூட்டத்தில் தீர்வு எட்டப்படாததால் நேற்று வழக்கம் போல் ஊருக்குள் லாரிகள் வந்து சென்றன.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்ய முடிவு செய்து 150 -க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகள் மற்றும் கால்நடைகளை அழைத்து கொண்டு மூட்டை முடிச்சுடன் தேன்கனிக்கோட்டை தாலுக்கா அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஊருக்குள் அருகே சாலையோரம் புறம்போக்கு நிலத்தில் குடிசைகள் அமைத்து அனைவரும் தங்கினர். கொட்டும் மழையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த தகவல் பேரில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவண மூர்த்தி, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ், தலைமையிலான போலீசார் அங்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் இரவு முழுவதும் கொட்டும் மழையிலும் குடிசைகளில் தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் இன்றும் 2-ம் நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு போலிசார் மற்றும் தியனைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

    ×