என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் மனு அளித்தனர்.
    • போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.

    இந்த குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தூசியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அந்த கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் மனு அளித்தனர்.

    ஆனால் அதிகாரிகள் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஊரை காலி செய்து ஊரின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊரே வெறிச்சோடியது.

    ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.

    கல்குவாரிகளை உடனே மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக பெய்த மழையால், ஏரி படிப்படியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
    • ஏரியின் கரைகள் உடைந்து, தண்ணீர் நெல்வயல்களில் புகுந்ததால், அறுவடைக்கு தயாராக நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மோடிகுப்பம். இக்கிராமத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். நெல், ராகி, வாழை உள்ளிட்ட பயிர்கள் செய்து வருகின்றனர்.

    இக்கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 'ராயல் ஏரி' அமைந்துள்ளது. இந்த ஏரியின் கீழ் 500 ஏக்கரில் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

    ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளுக்கு நீர் ஆதாரமாகவும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்கிறது. இவ்வாறான நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக பெய்த மழையால், ஏரி படிப்படியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    இரவு, மோடிகுப்பம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், ஏரி நிரம்பியது.

    இதனால் ஏரியின் கரைகள் உடைந்து, தண்ணீர் நெல்வயல்களில் புகுந்ததால், அறுவடைக்கு தயாராக நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.

    விவசாயிகளுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • கடத்தலில் வேறு யார்,யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகள் நடத்தி ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதுடன் கடத்தும் கும்பலை

    யும் கைது செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கொத்தகிருஷ்ணப்பள்ளி அருகே அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்றை மறித்து சோதனை செய்தனர்.

    அப்போது அந்த லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.

    இதையடுத்து அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் லாரியில் வந்த முருக்கநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 31), பூவரசன் (27) ஆகியோரையும் மடக்கி குருபரப்பள்ளி போலீசிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களை கைது ரேஷன் அரிசியை எங்கிருந்து கடத்தி வருகின்றனர்? எங்கு கொண்டு செல்கின்றனர்? இந்த கடத்தலில் வேறு யார்,யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்த மருத்துமனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார் சுக பிரசவத்தில் குழந்தைகள் பெற்று செல்கின்றனர்.
    • மருத்துவர் சிந்து, செவிலியர் சண்முகபிரியா ஆகியோரும் இதே மருத்து வமனையில் குழந்தைகள் பெற்றது குறிப்பிடதக்கது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார மருத்துமனையில் வட்டார மருத்துவர் வெண்ணிலா மற்றும் மருத்துவர்கள், வட்டார மேற்பார்வையாளர், ஆய்வாளர், பரிசோதகர்கள். செவிலியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த மருத்துவம னைக்கு சூளகிரி சுற்றுவட்டாரங்களில் இருந்து பொதுமக்கள் தினம்தோறும் பல்வேறு சிகிச்சை பெற வருகின்றனர். பிரசவத்திற்கு 30 படுக்கை வசதிகள் கொண்டுள்ள இந்த மருத்துமனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார் சுக பிரசவத்தில் குழந்தைகள் பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ராமமூத்து மனைவி இந்துமதி (வயது 26) என்பவர் சூளகிரி வட்டார மருத்துமனை குடியிருப்பில் தங்கியிருந்து இதே அரசுமருத்துமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

    2 ஆண்டுக்கு முன் இதே மருத்துவமனையில் முதல் ஆண் குழந்தையை பெற்றார்.அதேபோல் இரண்டாவது பிரசவத்திலும் மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்று தாயும், சேயும் நலமாக உள்ளனர். இவருக்கு மருத்துவர் சாந்தினி மற்றும் வட்டார மருத்துவர் வெண்ணிலா ஆகியோரின் ஆலோசனைபடி பிரசவம் நடந்தது.

    பொதுமக்களுக்கு முன் மாதியாக அரசு பணியாளர் அரசு மருத்துமனையில் குழந்தை பெற்றது போல அனைத்து பொது மக்களும் பயன் பெற்று கொள்ள வேண்டும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பும் இங்கு பணியாற்றிய மருத்துவர் சிந்து,

    செவிலியர் சண்முகபிரியா ஆகியோரும் இதே மருத்து வமனையில் சுகபிரசவத்தில் குழந்தைகள் பெற்றது குறிப்பிடதக்கது.

    • கிணற்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரியும் பூனை ஒன்று தவறி விழுந்து விட்டது.
    • தீயணைப்புத்துறை வீரர்கள் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி அரை மணி நேர போராட்டத்திற்கு பூனையை உயிருடன் மீட்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் கும்பார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (வயது 60). இவரது வீட்டில் 40 அடி ஆழம் உள்ள பழமையான பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரியும் பூனை ஒன்று தவறி விழுந்து விட்டது. பூனையும் அலறல் சத்தம் அவ்வப்போது கேட்டு வந்த நிலையில் அதனை அந்த பகுதியில் யாரும் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று பசியால் துடித்த பூனை அதிகமாக சத்தம் போட்டு அலறியது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கிணற்றை எட்டிப்பார்த்தபோது கிணற்றுக்குள் பூனை விழுந்து தவித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து உடனடியாக அவர்கள் ஓசூர் தீயணைப்புத ்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி அரை மணி நேர போராட்டத்திற்கு பூனையை உயிருடன் மீட்டனர்.

    அந்த பூனை அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் இப்ராகிம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. பூனை மீட்கப்பட்டது குறித்து அறிந்த அவர் அங்கு சென்று பூனையை மகிழ்ச்சியுடன் கடைக்கு எடுத்து சென்றார்.

    • காட்டு யானைகள் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • 3 காட்டு யானைகளை மேலுமலை வன பகுதிக்கு விரட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் பிக்கனபள்ளி மற்றும் மேலுமழை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகள் குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த மூன்று காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காட்டு யானைகள் சுற்றி, சுற்றி அப்பகுதியில் உலா வருவதை சிப்காட் பகுதியில் இருந்து விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    மேலும் இந்த காட்டு யானைகள் அருகே உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லாதவாறு தடுத்து வனத்துறையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டாசுகள் மூலம் யானைகளை விரட்ட வனத்துறையினர் போராடி வருகின்றனர். ஆனால் காட்டு யானைகள் வனபகுதிக்கு செல்லாமல் அப்பகுதி விவசாய நிலங்களில் மேய்ந்து அருகே உள்ள ஏரியில் ஆனந்த குளியல் போட்டு வருகிறது.காட்டு யானைகள் வனப்பகுதிக்கு விரட்டபட உள்ளதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் விவசாயிகள் பாதுக்கப்பான இடங்களுக்கும் செல்ல வேணடும் என ஒலிபெருக்கி முலமாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் குருபரப்பள்ளி சிப்காட் பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகளை மேலுமலை வன பகுதிக்கு விரட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • ஆன்லைனில் வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
    • நேரடியாக ரொக்க பணம் வசூலிக்கும் முறையையே நீட்டித்து கால் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் தனியார் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழைவதற்கு வரி செலுத்தும் முறையில் மாற்றம் செய்து ஆன்லைனில் வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். எனவே நேரடியாக ரொக்க பணம் வசூலிக்கும் முறையையே நீட்டித்து கால் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    தமிழக கர்நாடக எல்லை பகுதியான ஜூஜூவாடி பகுதியில் ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அமைந்துள்ளது. இதன் வழியாக ஒரு நாளில் சராசரியாக அண்டை மாநிலங்களிலிருந்து இருந்து சுமார் 7,000 வாகனங்கள் நுழைவு வரி செலுத்தி தமிழகத்திற்குள் வருவது வழக்கம். அவ்வாறு நுழைவு வரியை ரொக்கப் பணமாக இது நாள் வரை வாகன ஓட்டிகள் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஆன்லைனில் நுழைவு வரி கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகள், ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்,காய்கறிகள், மலர்கள் போன்ற சரக்கு வாகனங்களும் தமிழகத்திற்குள் நுழைய முடியாமல், நுழைவு வரி கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால், அந்த வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    இது மட்டுமன்றி, ஆன்லைனில் நுழைவு வரி செலுத்தும்போது, கர்நாடகா மற்றும் பிற மாநில பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் கிடைக்கப்பெறாததால் வரி செலுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் சில நேரங்களில் இணையதளத்தில் இது குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்வதற்கு பல மணி நேரம் கால தாமதம் ஆவதாலும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாவது மட்டுமின்றி வாகனங்களை நம்பி அதில் பயணிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ரொக்க பணமாக நேரடியாக நுழைவு வரி வசூல் செய்யும் முறையையே சிறிது காலத்திற்கு நீட்டித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • 1,307 வழக்குகளில் ரூ.10 கோடியே 82 லட்சத்து 76 ஆயிரத்து 850 க்கு தீர்வு காணப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்க ளில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களி லும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி, தாமோதரன் தலைமை தாங்கினார்.

    நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் வேல்முருகன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நடுவர் ராஜ சிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி லீலா, கூடுதல் சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி. கோவிந்தராஜூலு, சங்க செயலாளர் ராஜா விஸ்வநாத் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு 6430 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1,307 வழக்குகளில் ரூ.10 கோடியே 82 லட்சத்து 76 ஆயிரத்து 850 க்கு தீர்வு காணப்பட்டது.

    இதில் முக்கியமாக சாலை விபத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்த பல மனுதாரர்கள் இடைவிடாது பெய்த மழையிலும் தங்கள் வழக்கறிஞர்களுடன் விசாரணைக்காக ஆஜராகி சமரசமாக வழக்குகளில் இழப்பீடு பெற்றுச் சென்றனர்.

    • தடம் எண்: கே 54-ஐ போச்சம்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • எம்எல்ஏ மதியழகன் தலைமை வகித்து பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் கிராமம் இயக்கப்படும் அரசு பேருந்து தடம் எண்:13-ஏ, வேலம்பட்டி கிராமம் வரை நீட்டிக்க வேண்டும். ஊத்தங்கரையில் இருந்து படவனூர் ரயில்வே கேட், ஒலைப்பட்டி வழியாக போச்சம்பள்ளி வரை இயக்கப்படும் தடம் எண்: யு-08 பேருந்து பாரண்டப்பள்ளி புதூர், பூதனூர் வழியாக நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    மேலும், கிருஷ்ணகிரி நகரில் இருந்து ஜெகதேவி, பர்கூர் வழியாக மஸ்திகானூர் வரை இயக்கப்பட்ட அரசு பேருந்து தடம் எண்:கே 15, மரிமானப்பள்ளி கிராமம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதே போல், கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் பாலேகுளி, வேலம்பட்டி, கரடியூர் இயக்கப்படும் அரசு பேருந்து தடம் எண்: கே 54-ஐ போச்சம்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை, பர்கூர் எம்எல்ஏ மதியழகனிடம், கிராம மக்கள் அளித்தனர். இதுகுறித்து திருப்பத்தூர், ஊத்தங்கரை மற்றும் கிருஷ்ணகிரி போக்கு வரத்து பணிமனை அலுவ லர்களிடம் தெரிவித்து, 4 பேருந்துகளின் வழித்தடத்தை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வழித்தட நீட்டிக்கப்பட்ட பேருந்துகளின் தொடக்கவிழா, பர்கூர் பேருந்து நிலையத்தில் நடந்தது. எம்எல்ஏ மதியழகன் தலைமை வகித்து பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது, பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு, பூக்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஒன்றியக்குழு தலைவர் கவிதாகோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மகேந்திரன், அறிஞர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    • கே.ஆர்.பி. அணை 65 ஆண்டுகள் முடிந்து 66- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.
    • தென்பெண்ணை ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்ய தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக முடிவு செய்து செயல்படுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகத்தினுடைய வடக்கு மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடுகின்ற தென்பெண்ணையாற்றின் குறிக்கே 1952-ல் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1957-ல் திறப்பு விழா செய்யப்பட்ட கே.ஆர்.பி. அணை 65 ஆண்டுகள் முடிந்து 66- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

    இந்த மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ள இந்த அணையால் வெளியூர்க ளுக்கு வேலைக்கு போய்க்கொண்டிருந்த மக்கள் விவசாயம் செய்து இந்த நாட்டு மக்களுக்காக உணவு உற்பத்தியை கொடுப்பது மட்டுமல்லாமல் காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்றவைகளை உற்பத்தி செய்து இந்த நாட்டின் தேவையை பூர்த்தி செய்கின்றனர் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.எம். ராமகவுண்டர் கூறியுள்ளார்.

    எனவே காமராஜரை நினைவு கூறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்ய தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக முடிவு செய்து செயல்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, வெங்கடேசன். அனுமந்த ராசு, சக்திசங்கர், தேன்மொழி, இஸ்ரவேல், ஜெயபால், சின்னசாமி, கோபி.நடராஜ், பரசுரா மன், அனுமந்தன், கோவிந்தராஜ். திம்மராயன், தேவராஜ், நாராயணன், கணேசன்,சக்திவேல், சின்னசாமி, முனுசாமி, கார்த்திக், ஆவின் கோவிந்தராஜ் உள்ளிட்ட பல விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

    • லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
    • புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரே வெறிச்சோடியது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தூசியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அந்த கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் மனு அளித்தனர். மேலும் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர்.

    மேலும் கடந்த 2-ந்தேதி கொரட்டகிரி கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர். அவர்களிடம் மாவட்ட போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

    ஆனால் அதிகாரிகள் கூறியபடி கல் குவாரிகளை மூட உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் கிராம மக்கள் கால்நடைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் ஊரை காலி செய்து ஊரின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரே வெறிச்சோடியது.

    இதனிடையே நேற்று ஊருக்குள் செல்லும் சாலையை முட்செடிகளை வைத்து மக்கள் அடைத்தனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாகவும், ஒரு கமிட்டி அமைத்து அதன் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு நீங்கள் ஆய்வு செய்து வரும் வரை நாங்கள் கூடாரத்திலேயே காத்திருக்கிறோம்.

    இதில் சமூக உடன்பாடு ஏற்படவில்லை எனில் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என கிராம மக்கள் கூறி கொட்டும் மழையில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே குழந்தைகளுடன் தங்கினர். இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என சமுக ஆர்வலர்களும் பொதுமக்க ளும் கூறிவருகின்றனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளை தொடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ஓசூர்,

    ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அவர் பேசுகையில் மின் வெட்டு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும், மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் பழுது அடைந்திருந்தால் உடனே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    மழைக்காலங்களில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மின் கம்பிகள் சாலையில் கிடந்திருந்தால் உடனே மின் வாரியத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் எச்சரிக்கையாக செல்லவேண்டும். மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். அவற்றைத் தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்ட கூடாது.

    குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளை தொடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட செயற் பொறியாளர் (இயக்கமும் பராமரிப்பும்) ஜெயபிரகாஷ் மற்றும் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட ஓசூர் கோட்டத்தை சேர்ந்த மின் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×