என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கம்பி மீது பட்டதால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
    • கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 29).இவர் கிருஷ்ணகிரி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் தங்கியுள்ள வீட்டின் முன்புறம் சென்ற மின்கம்பி ஒன்று மிகவும் தாழ்வாக சென்றுள்ளது.

    எதிர்பாராத விதமாக ரஞ்சித்தின் கை அந்த கம்பி மீது பட்டதால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தளி அருகேயுள்ள குமார பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்பா (57) என்ற பெயிண்டிங் தொழிலாளி தான் வேலை பார்த்த கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பின் வாசல் வழியாக கோவில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • மர்ம நபரை பாரூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் பழமை வாய்ந்த தென்னிஸ்வரன் சிவன் கோவில் உள்ளது.

    நாள்தோறும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக இந்த ஆற்றங்கரையில் வந்து குளித்து விட்டு, புனித நீராடி திதி கொடுத்துவிட்டு ஈஸ்வரனை வணங்கி வழிபாடு செய்து விட்டு அன்னதானம் வழங்கி விட்டு செல்வது வழக்கம்.

    இவர்கள் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகளை கோவில் உண்டியலில் போடுவது வழக்கமாக இருந்தனர்.

    இதில் கடந்த ஆடி 18 அன்று போடப்பட்ட காணிக்கை பணம் நகைகளை எடுத்து பின்னர் கடந்த மூன்று மாதங்களாக உண்டியலில் இருந்து பணம் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இதில் சுமார் ஆயிரகணக்கில் உண்டியலில் பணம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு தென்பெண்ணை ஆற்றங்கரையிலிருந்து பின் வாசல் வழியாக கோவில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் மர்ம நபர் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அழேக்காக தூக்கி செல்லும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ள அந்த அந்த மர்ம நபரை பாரூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக திருமூர்த்திக்கு மகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் குமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருமூர்த்தியை கைது செய்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சீபம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 24). கூலித்தொழிலாளி. சூளகிரி அருகே அழகுபாவி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மகேஸ்வரி (21). இவர்கள் 2 பேரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இதையடுத்து இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 30.10.2022 அன்று இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக திருமூர்த்திக்கு மகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதேபோல நேற்று முன்தினம் அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த திருமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால், புதுப்பெண் மகேஸ்வரியின் தலையின் பின்புறத்திலும், இடது கை பக்கமும் கத்தியால் குத்தியும், வெட்டியும் உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த மகேஸ்வரியை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகேஸ்வரி உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருமூர்த்தியை கைது செய்தார். திருமணமான 15 நாளில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்தாஜ், சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கொத்தூர் சாலையில் உள்ள ஒரு மஹாலில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பழனிபாபா பேரவை சார்பில் அவரது பிறந்த நாளையொட்டி வரலாற்றை விளக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

    இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து சாப்பிட செல்லும் நேரத்தில் ஓசூர் ராம்நகரை சேர்ந்த சர்தாஜ் (வயது 22), இமாம்பாடாவை சேர்ந்த மகபூப் (30) ஆகிய 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து, சர்தாஜ் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் அரிவாள், கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் மகபூப் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

    அப்போது, மகபூப் உடன் வந்தவர்கள், ஆயுதங்களை பறித்து சர்தாஜ் தரப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. 2 தரப்பினரும் மோதிக் கொண்டதில் சர்தாஜ், அவரது நண்பர் பவன் பிரகாஷ் (21), மகபூப் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்களில், தாஜ் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பவன் பிரகாஷ் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மகபூப், மத்திகிரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் மற்றும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மோதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 2 தரப்பிலும் காயமடைந்தவர்கள் பலத்த காயங்களுடன் இருப்பதால் முழு விவரங்களும் தெரியவில்லை.

    இந்த நிலையில், பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்தாஜ், சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இவர் மெக்கானிக்-ஆக வேலை செய்து வந்தார். இதுகுறித்து அவரது தந்தை பயாஸ் மத்திகிரி போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வதை தடுக்க வேண்டும்.
    • பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை என ஊர் பொதுமக்கள் அரசு அலுவலர்களை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்ட கிரியில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகிறது.

    இந்த கல்குவாரிகளால் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், பொது மக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியுள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் கல்குவாரிகளில் உள்ள கனரக வாகனங்கள், லாரிகள் அந்த கிராமத்தில் வழியாக சாலையில் செல்லும் போதும் பள்ளி குழந்தைகள் சத்தத்தினால் படிக்க இயலவில்லை.

    கல்குவாரிகளில் கல் உடைக்க வைக்கும் வெடி வெடிப்பதன் மூலம் அதிகபடியான சத்தம், நச்சு காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வதை தடுக்க வேண்டும். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை என ஊர் பொதுமக்கள் அரசு அலுவலர்களை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே காட்டில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுமார் 200 குடும்பங்கள் கைக்குழந்தைகளோடு 5 நாட்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் தங்களுடைய உடைமைகளை இழந்து காட்டில் அவதியுற்று வருகிறார்கள்.

    இது பற்றி தகவல் அறிந்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் எம்.பி. நேற்றிரவு கொரட்டகிரிக்கு சென்றார். அங்கு கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து விபரம் கேட்டறிந்தார். பின்னர் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எம்.பி.யும் கலந்து கொண்டார்.

    இன்று 5-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.

    இந்த குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தூசியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அந்த கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க க்கோரி பல இடங்களில் மனு அளித்தனர்.

    ஆனால் அதிகாரிகள் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஊரை காலி செய்து ஊரின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊரே வெறிச்சோடியது.

    ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.

    கல்குவாரிகளை உடனே மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • சீனிவாசகவுடு ஸ்ரீநாத் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சிறப்பு தனிப்படை போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வேப்ப னப்பள்ளியில் குப்பம் ரோடு செல்லும் சாலையில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சின்னபொம்மரசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசகவுடு ஸ்ரீநாத் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் மற்றொரு மளிகை கடையில் குட்கா பொருள்களை கைப்பற்றிய போலீசார் அந்த கடையின் உரிமையாளர் அரியனபள்ளி கிராமத்தை சேர்ந்த நஞ்சேகவுடு மகன் முரளி (40) என்பவரை கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் சுமார் 4 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏரி தற்போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி உள்ளது.
    • ஏரிக்கரை தொடர்ந்து சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் விவசாயிகள் தென்னை, வாழை, நெல் வயல் மற்றும் மலர் தோட்டங்கள் ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த 8 ஆண்டுகளாக நிரம்பாத இந்த ஏரி தற்போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி உள்ளது.

    ஏரி நிரம்பியதையடுத்து ஏரி கரையின் மையப்பகுதியில் தாழ்வான இடத்தில் தண்ணீர் வெளியேறி கரையில் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் கரை சேதமடைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால் ஏரிக்கரை தொடர்ந்து சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அறிந்த ஓசூர் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி பகுதிக்கு சென்று சேதமடைந்த கரையை பார்வையிட்டனர்.

    ஆனால் கரை உடைப்பை சீர் செய்யும் எந்த பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை, மாறாக ஏரியின் கடைக்கோடியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு ஒரு பாதையை ஏற்படுத்தி ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

    இதனால் கனமழைக்கு நிரம்பிய ஏரியின் தண்ணீர் அனைத்தும் அவ்வழியாக வெளியேறி வீணாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. மழை நேரத்தில் ஏரியில் சேமிக்கப்பட்ட தண்ணீர் வீணாகி செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து தண்ணீர் அனைத்தும் சென்றால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் சேதமான ஏரிக்கரை உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் அபாய நிலை உருவாகும்,

    எனவே ஏரிக்கரை உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரியிலிருந்து வீணாக வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
    • மிளகாய்ப்பொடியை அங்கிருந்தவர்கள் மீது தூக்கி வீசியதில் கண்களில் விழுந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் அருகேயுள்ள முதுகம்பட்டி கிராமத்தில் காவேரிப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரது மனைவி சாந்தி என்பவருக்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னை தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் காவலாளியாக முத்து என்பவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் காவலாளி முத்து நிலத்தின் உரிமையாளரை தோட்டத்திற்கு வந்தால் மிரட்டுவதும், உள்ளே வரக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டு வந்தாகவும் கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சாந்தி அவரது குடும்பத்தினர் 50-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையை அப்புறப்படுத்தியுள்ளனர்.

    தொடர்ந்து வீட்டையும் கடப்பாரையால் இடித்து அகற்ற முயற்சிக்கும் போது காவலாளி முத்து, அவரது மனைவி, மகன்கள் தடுத்துள்ளனர். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    பின்னர் காவலாளி முத்து, அவரது மனைவி இருவரும் வீட்டில் இருந்த மிளகாய்ப்பொடியை அங்கிருந்தவர்கள் மீது தூக்கி வீசியதில் கண்களில் விழுந்தது. இதையடுத்து கற்களால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர்.

    இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசா ருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் இருதரப்பினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 964 கனஅடியாக அதிகரித்தது.
    • வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ண கிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கெலவரப்பள்ளி அணைக்கு இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 964 கனஅடியாக அதிகரித்தது.

    இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 908 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரும், சூளகிரி, சின்னாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும், மார்க்கண்டேய நதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    அதன்படி இன்றுகாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,407 கனஅடியாக அதிகரித்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து உயர்ந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதனால் அணையில் இருந்து மதகுகள் வழியாக 1,919 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணி, வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல சின்னாறு அணைக்கு வினாடிக்கு 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை வினாடிக்கு 284 கனஅடியாக அதிகரித்தது. அணையில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் உள்ளதால், உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் பாம்பாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 824 கனஅடியாக அதிகரித்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவை நீர்மட்டம் எட்டி வருகிறது.

    தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை,சின்னாறு மற்றும் பாம்பாறு அணை ஆகியவற்றின் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோடிகுப்பம் கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ராயல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளுக்கு நீர் ஆதாரமாகவும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் பரவலாக பெய்த மழையால், ராயல் ஏரிக்கு தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மோடிகுப்பம் சுற்று வட்டார பகுதியில் கன மழை கொட்டி தீர்த்ததால் ஏரி நிரம்பியது. இதனால் ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் நெல்வயல்களில் புகுந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 250 ஏக்கர்நெற்பயிர்கள் சேதமானது.

    • குரும்பர் சமுதாய மக்களின் குருவாக போற்றப்படுகிறார்.
    • கனகதாசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    ஓசூர்,

    15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ பக்தர் கவி கனகதாசர். இவர் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கன்னட பக்தி இலக்கியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். இவர், குரும்பர் சமுதாய மக்களின் குருவாக போற்றப்படுகிறார்.

    ஓசூரில், குரும்பர் சமூக மக்கள் சார்பில் கவி கனகதாசரின் 535- வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பாப்பண்ணா தலைமையில், ஓசூர் ராயக்கோட்டை ரோடு சர்க்கிளில் உள்ள பண்ட ஆஞ்சநேயா சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக 100- க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர்ஓசூர் தாசர பேட்டையில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற விழாவிற்கு, மாவட்ட குரும்பர் சமூக தலை வர்திம்மராஜ் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் கலந்து கொண்டு கனகதாசர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், அரசு வக்கீல் சின்னபிள்ளப்பா, குரும்பர் சங்க நிர்வாகி சேகர் உள்பட பலர் விழாவில் பேசினார்கள். விழாவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோனேரிப்பள்ளி கோபம்மா சக்கர்லப்பா, பி.எஸ். திம்மசந்திரம் முனிகிருஷ்ணப்பா,தொழிலதிபர்சத்யமூர்த்தி, மற்றும் குரும்பர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • மழை நீர் நிரம்பி பாறைகளின் மீது வழியும். இது காண்பதற்கு அருவி போல காட்சி தரும்.
    • தொடர் மழை பெய்தால் பல நாட்களுக்கு அருவி போல தண்ணீர் கொட்டும்.

    சூளகிரி,

    காஷ்மீர் - கன்னியாகுமரி தேசிநெடுஞ்சாலையில் சூளகிரி ஒரமாக அமைந்துள்ள மலை அவ்வழியாக பயணம் செய்வோரின் கவனத்தை கவரும்.இந்த மலைக்கு பழமையான வரலாறு உள்ளது. இந்த மலையின் மேற்பரப்பில் சிறிய பெரிய பள்ளங்கள் உள்ளதால் கன மழை பெய்தால் இந்த பள்ளங்களில் மழை நீர் நிரம்பி பாறைகளின் மீது வழியும். இது காண்பதற்கு அருவி போல காட்சி தரும்.

    தொடர் மழை பெய்தால் பல நாட்களுக்கு அருவி போல தண்ணீர் கொட்டும். தற்போது அந்த அருவியை தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    ×