என் மலர்
நீங்கள் தேடியது "மிளகாய் பொடி வீசி அடிதடி"
- இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
- மிளகாய்ப்பொடியை அங்கிருந்தவர்கள் மீது தூக்கி வீசியதில் கண்களில் விழுந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் அருகேயுள்ள முதுகம்பட்டி கிராமத்தில் காவேரிப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரது மனைவி சாந்தி என்பவருக்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் தென்னை தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் காவலாளியாக முத்து என்பவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் காவலாளி முத்து நிலத்தின் உரிமையாளரை தோட்டத்திற்கு வந்தால் மிரட்டுவதும், உள்ளே வரக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டு வந்தாகவும் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த சாந்தி அவரது குடும்பத்தினர் 50-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையை அப்புறப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து வீட்டையும் கடப்பாரையால் இடித்து அகற்ற முயற்சிக்கும் போது காவலாளி முத்து, அவரது மனைவி, மகன்கள் தடுத்துள்ளனர். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
பின்னர் காவலாளி முத்து, அவரது மனைவி இருவரும் வீட்டில் இருந்த மிளகாய்ப்பொடியை அங்கிருந்தவர்கள் மீது தூக்கி வீசியதில் கண்களில் விழுந்தது. இதையடுத்து கற்களால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசா ருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் இருதரப்பினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.






