என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வேப்பனப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து, பா.ஜனதா சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியத்தில் தி.மு.க. அரசை கண்டித்தும், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வேப்பனப்பள்ளி காந்தி சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் வி.எம். அன்பரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஸ்ரீதர் வரவேற்றார். சாந்தி விநாயகர் பேசினார். இதில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் முரளி, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ஜானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இங்கு யாராவது இறந்தால் புதைக்க சுடுகாடு இல்லை.
    • மயானத்திற்கு இடம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

    சூளகிரி,

    சூளகிரி அருகே உள்ள பீளாலம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நடுநிலைப் பள்ளி, கோவில்கள், அரசு அலுவலங்கள் உள்ளன.

    ஆனால் இங்கு யாராவது இறந்தால் புதைக்க சுடுகாடு இல்லை.

    ஆற்று கால்வாய்களை தாண்டி சென்று விளை நிலங்களில் புதைப்பது வழக்கம். மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஆற்றில் வந்தாலும், பிணத்தை ஆற்றின் நடுவழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும்.இந்நிலையில் இதே ஊரை சேர்ந்த சக்கரலம்மா என்ற மூதாட்டி இறந்து போனார்.

    மூதாட்டியின் சடலத்தை புதைக்க ஆற்று வழியாக தூக்கி சென்றனர். இதையடுத்து சூளகிரி தாசில்தார் அனி தா, பி.டி.ஓ. சிவக்குமார், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் சஞ்சுபதி ஆகியோர் வந்து பார்வையிட்டு மயானத்திற்கு இடம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். 

    • 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • நகாராட்சி தலைவர் பரிதா நவாப் கர்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பூ வழங்கி வாழ்த்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    தற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்.

    கிருஷ்ணகிரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி லட்சுமி, மற்றும் தெய்வமணி, தனம், அமிர்தா, ஜெயலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கர்ப்பிணிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர். பின்னர் கர்ப்பிணிகளுக்கு புடவை, பூ, பழம், மஞ்சள், குங்குமம் அடங்கிய சீர்வரிசையை மதியழகன் எம்.எல்.ஏ., வழங்கி வாழ்த்தினார். கிருஷ்ணகிரி நகாராட்சி தலைவர் பரிதா நவாப் கர்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பூ வழங்கி வாழ்த்தினார்.

    இதில் தி.மு.க., மாவட்ட அவை தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், கவுன்சிலர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.
    • மனமுடைந்த சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தொடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 58).விவசாயியான இ வருக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.

    ஆனால் அவரது குடும்பத்தினர் அதை ஏற்கவில்லை.மேலும் சின்னசாமியின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதில் மனமுடைந்த சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கே.ஆர்.பி.அணை போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி. நாராயணசாமி (42) என்பவர் குடிக்க மனைவி பணம் த ரவில்லை என்பதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆதிதிராவிடர் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
    • மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    இலவச வீட்டுமனை பட்டா வழங்கி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் வீடு கட்டி தர வேண்டும் என்று கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சி காந்திநகர் காலனியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

    காந்தி நகர் காலனியில் 50&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 45 ஆண்டுகளுக்கு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த எங்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் 4 முதல் 5 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். போதிய இடவசதி இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

    டந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 10-க்கும் அதிகமான மனுக்களை அளித்து உள்ளோம். ஆனால், இதுவரை எங்களது மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்றாட கூலி வேலை செய்து வரும் நாங்கள் ஒரே வீட்டில் இடநெருக்கடி வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போல், எங்கள் குழந்தைகள் 75&க்கும் அதிகமானவர்கள், தேர்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி படித்து வருகின்றனர். பள்ளிக்கு சென்று பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று வந்தனர். இந்த நிலையில் தனிநபர் ஒருவர், பள்ளிக்கு செல்லும் வழியை அடைத்துவிட்டார். இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு மிகுந்த சிரமத்துடன் மாற்று வழியில் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே, பள்ளிக்கு சென்று தேவையான வழியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது. 

    • சிப்காட் பகுதிக்குள் 3 யானைகளும் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
    • 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் யானைகள் விரட்டினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. மேலும் பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் 3 யானைகளும் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் யானையை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அடர்ந்த வனப்பகுதியிலேயே முகாமிட்டு இருந்தன.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் கிருஷ்ணகிரி அருகில் உள்ள பையனப்பள்ளி அடுத்த ஜாகிர்மோட்டூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. மேலும் அங்கிருந்த நெல் பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தன. யானைகள் முகாமிட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ரவியை யானை ஒன்று துதிக்கையால் தூக்கி வீசியது.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வன அலுவலர் மகேந்திரன், ராயக்கோட்டை வன அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் யானைகள் விரட்டினர்.

    இந்த நிலையில் இன்றுகாலை கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் அந்த 3 யானைகள் நின்று கொண்டு இருந்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானையை வேடிக்கை பார்த்தனர். உடனே விரைந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பா.ம.க.தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட அமைப்பு செயலாளர் விசுவநாதன், துணை செயலாளர் வெங்க டேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தர்மபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி ஆகி யோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றி னார்கள்.

    இதில், பா.ம.க. மாநில துணைத்தலைவர் தா.தேவராஜன், பா.ம.க. வக்கீல்கள் சமூக நீதி பேரவை தகவல், தொழில்நுட்ப துறையின் மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் மாநில மாவட்ட, நகர பா.ம.க. நிர்வாகிகள், உழவர் பேரியக்க நிர்வாகிகள், பா.ம.க.தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் குரல் எழுப்புவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

    • 25-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    • மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரி,

    பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மரிமானப்பள்ளி கிராமம் இருளர் காலனியை சேர்ந்த, 25-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பர்கூர் தாலுகா, மல்லப்பாடி ஊராட்சி மரிமானப்பள்ளி கிராம இருளர் காலனியில், 33 குடும்பங்களை சேர்ந்த, 90 பேர், 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைவசதி, ஜாதி சான்றிதழ், சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எங்கள் வீடுகளும் சிதிலமடைந்து உள்ளன. குடிநீருக்காக, 3 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் அவலம் உள்ளது.

    இந்நிலையில் மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரியத்திற்கு டெபாசிட் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் கம்பங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குழந்தைகள் இருளிலும், மழையிலும், விஷக்கடி பயத்தாலும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்காலிக பட்டா வழங்கப்படும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறைப்படி இடத்தை அளவீடு செய்து நிரந்தர பட்டா வழங்க வில்லை. குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் கல்வி தொடர முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக உருவாகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லயன் குவெஸ்ட் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • பயிற்சி பெற்ற ஆசிரியர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட அரிமா சங்கங்கள் இணைந்து நடத்திய லயன் குவெஸ்ட் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    இதில் ஆசிரியர்களுக்கு வளர் இளம் பருவ திறன்கள் மற்றும் குழந்தைகளை எப்படி கையாள்வது குறித்து அரிமா ரமா ரவி பயிற்சி அளித்தார். மாவட்ட தலைவர் அரிமா சக்தி வரவேற்புரையாற்றினார், மாவட்ட ஆளுநர் அரிமா முத்தையா உரையாற்றினார்,

    இந்நிகழ்விற்கு அதியமான் கல்வி நிறுவனங் களின் நிறுவனர் அரிமா சீனி.திருமால் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி, சரவணகுமார் மற்றும் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் அரிமா செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இவ்விழாவிற்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் அலுவலர் சீனி.கணபதிராமன் மற்றும் அதியமான் மேல்நிலைப்பள்ளியின் துணை முதல்வர் அபிநயா கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவுவிழாவில் முன்னாள் பன்னாட்டு இயக்குநர் அரிமா தனபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் அரிமா பாலமுருகன் நன்றியுரையாற்றினார். இதில் பயிற்சி பெற்ற ஆசிரியர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • நவீன ஹெல்மெட் சென்சார் கருவியை, ஜீவா கண்டுபிடித்துள்ளார்.
    • ஹெல்மெட்டை கழற்றி விட்டால், 10 வினாடிகளில் .வாகனம் அதுவாகவே என்ஜினை நிறுத்தி விடும்..

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி எஸ்.எல்.வி. நகரை சேர்ந்தவர் குமார். இவரின் மகன் ஜீவா (வயது 17). இவர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற நிலையில் நவீன ஹெல்மெட் சென்சார் கருவியை, ஜீவா கண்டுபிடித்துள்ளார்.

    ஹெல்மெட்டுடன் ஜீவா கண்டுபிடித்துள்ள கருவியை பொருத்தி இருசக்கர வாகனத்துடன் இணைத்து விட்டால் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வா.கனத்தை இயக்க முடியும். ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் இயங்காது.

    ஹெல்மெட் அணியுமாறு எச்சரிக்கை ஒலி அந்த கருவி எழுப்பும். வாகனத்தை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தி, ஹெல்மெட்டை கழற்றி விட்டால், 10 வினாடிகளில் .வாகனம் அதுவாகவே என்ஜினை நிறுத்தி விடும்.. இதுகுறித்து மாணவர் ஜீவா கூறியதாவது:- கார் போன்ற வாகனங்களில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பம் உள்ளது.

    அதேபோல் இருசக்கர வாகனங்களிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூட.கூடிய சென்சார் கருவியை தயாரிக்க திட்டமிட்டேன். எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் இதை செய்து முடித்துள்ளேன்.

    இந்த சோதனை முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ரூ.3,000 ரூபாய் விலையில் இந்த கருவியை இருசக்கர வாகனத்தில் பொருத்தி விடலாம். இவ்வாறு மாணவர் ஜீவா கூறியுள்ளார்.

    ×