என் மலர்
உள்ளூர் செய்திகள்

பீளாலம் கிராமத்தில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்ட காட்சி.
சூளகிரி அருகே ஆற்றை கடந்து சென்று உடல்கள் புதைப்பு: மயான இடம் ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி
- இங்கு யாராவது இறந்தால் புதைக்க சுடுகாடு இல்லை.
- மயானத்திற்கு இடம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.
சூளகிரி,
சூளகிரி அருகே உள்ள பீளாலம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நடுநிலைப் பள்ளி, கோவில்கள், அரசு அலுவலங்கள் உள்ளன.
ஆனால் இங்கு யாராவது இறந்தால் புதைக்க சுடுகாடு இல்லை.
ஆற்று கால்வாய்களை தாண்டி சென்று விளை நிலங்களில் புதைப்பது வழக்கம். மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஆற்றில் வந்தாலும், பிணத்தை ஆற்றின் நடுவழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும்.இந்நிலையில் இதே ஊரை சேர்ந்த சக்கரலம்மா என்ற மூதாட்டி இறந்து போனார்.
மூதாட்டியின் சடலத்தை புதைக்க ஆற்று வழியாக தூக்கி சென்றனர். இதையடுத்து சூளகிரி தாசில்தார் அனி தா, பி.டி.ஓ. சிவக்குமார், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் சஞ்சுபதி ஆகியோர் வந்து பார்வையிட்டு மயானத்திற்கு இடம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.






