என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் வண்டி இயங்காது: இருசக்கர வாகனங்களில் பயன்படுத்த ஓசூர் மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
- நவீன ஹெல்மெட் சென்சார் கருவியை, ஜீவா கண்டுபிடித்துள்ளார்.
- ஹெல்மெட்டை கழற்றி விட்டால், 10 வினாடிகளில் .வாகனம் அதுவாகவே என்ஜினை நிறுத்தி விடும்..
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி எஸ்.எல்.வி. நகரை சேர்ந்தவர் குமார். இவரின் மகன் ஜீவா (வயது 17). இவர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற நிலையில் நவீன ஹெல்மெட் சென்சார் கருவியை, ஜீவா கண்டுபிடித்துள்ளார்.
ஹெல்மெட்டுடன் ஜீவா கண்டுபிடித்துள்ள கருவியை பொருத்தி இருசக்கர வாகனத்துடன் இணைத்து விட்டால் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வா.கனத்தை இயக்க முடியும். ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் இயங்காது.
ஹெல்மெட் அணியுமாறு எச்சரிக்கை ஒலி அந்த கருவி எழுப்பும். வாகனத்தை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தி, ஹெல்மெட்டை கழற்றி விட்டால், 10 வினாடிகளில் .வாகனம் அதுவாகவே என்ஜினை நிறுத்தி விடும்.. இதுகுறித்து மாணவர் ஜீவா கூறியதாவது:- கார் போன்ற வாகனங்களில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பம் உள்ளது.
அதேபோல் இருசக்கர வாகனங்களிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூட.கூடிய சென்சார் கருவியை தயாரிக்க திட்டமிட்டேன். எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் இதை செய்து முடித்துள்ளேன்.
இந்த சோதனை முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ரூ.3,000 ரூபாய் விலையில் இந்த கருவியை இருசக்கர வாகனத்தில் பொருத்தி விடலாம். இவ்வாறு மாணவர் ஜீவா கூறியுள்ளார்.






