என் மலர்
நீங்கள் தேடியது "உண்டியலை உடைத்து கொள்ளை"
- பின் வாசல் வழியாக கோவில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
- மர்ம நபரை பாரூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் பழமை வாய்ந்த தென்னிஸ்வரன் சிவன் கோவில் உள்ளது.
நாள்தோறும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக இந்த ஆற்றங்கரையில் வந்து குளித்து விட்டு, புனித நீராடி திதி கொடுத்துவிட்டு ஈஸ்வரனை வணங்கி வழிபாடு செய்து விட்டு அன்னதானம் வழங்கி விட்டு செல்வது வழக்கம்.
இவர்கள் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகளை கோவில் உண்டியலில் போடுவது வழக்கமாக இருந்தனர்.
இதில் கடந்த ஆடி 18 அன்று போடப்பட்ட காணிக்கை பணம் நகைகளை எடுத்து பின்னர் கடந்த மூன்று மாதங்களாக உண்டியலில் இருந்து பணம் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இதில் சுமார் ஆயிரகணக்கில் உண்டியலில் பணம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு தென்பெண்ணை ஆற்றங்கரையிலிருந்து பின் வாசல் வழியாக கோவில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் மர்ம நபர் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அழேக்காக தூக்கி செல்லும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ள அந்த அந்த மர்ம நபரை பாரூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.






