search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆனதையொட்டி   தென்பெண்ணை ஆற்றின் கேஆர்பி. அணையில் மலர் தூவி மரியாதை
    X

    கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆனதையொட்டி தென்பெண்ணை ஆற்றின் கேஆர்பி. அணையில் மலர் தூவி மரியாதை

    • கே.ஆர்.பி. அணை 65 ஆண்டுகள் முடிந்து 66- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.
    • தென்பெண்ணை ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்ய தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக முடிவு செய்து செயல்படுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகத்தினுடைய வடக்கு மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடுகின்ற தென்பெண்ணையாற்றின் குறிக்கே 1952-ல் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1957-ல் திறப்பு விழா செய்யப்பட்ட கே.ஆர்.பி. அணை 65 ஆண்டுகள் முடிந்து 66- வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.

    இந்த மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ள இந்த அணையால் வெளியூர்க ளுக்கு வேலைக்கு போய்க்கொண்டிருந்த மக்கள் விவசாயம் செய்து இந்த நாட்டு மக்களுக்காக உணவு உற்பத்தியை கொடுப்பது மட்டுமல்லாமல் காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்றவைகளை உற்பத்தி செய்து இந்த நாட்டின் தேவையை பூர்த்தி செய்கின்றனர் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் கே.எம். ராமகவுண்டர் கூறியுள்ளார்.

    எனவே காமராஜரை நினைவு கூறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் மலர் தூவி மரியாதை செய்ய தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக முடிவு செய்து செயல்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, வெங்கடேசன். அனுமந்த ராசு, சக்திசங்கர், தேன்மொழி, இஸ்ரவேல், ஜெயபால், சின்னசாமி, கோபி.நடராஜ், பரசுரா மன், அனுமந்தன், கோவிந்தராஜ். திம்மராயன், தேவராஜ், நாராயணன், கணேசன்,சக்திவேல், சின்னசாமி, முனுசாமி, கார்த்திக், ஆவின் கோவிந்தராஜ் உள்ளிட்ட பல விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×