என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மினி லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
- ரேசன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- கடத்தலில் வேறு யார்,யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகள் நடத்தி ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதுடன் கடத்தும் கும்பலை
யும் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கொத்தகிருஷ்ணப்பள்ளி அருகே அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்றை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் லாரியில் வந்த முருக்கநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 31), பூவரசன் (27) ஆகியோரையும் மடக்கி குருபரப்பள்ளி போலீசிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களை கைது ரேஷன் அரிசியை எங்கிருந்து கடத்தி வருகின்றனர்? எங்கு கொண்டு செல்கின்றனர்? இந்த கடத்தலில் வேறு யார்,யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






