என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா"
- மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
- மருத்துவ படிப்பில் இடம் பெற உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை வாழ்த்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி அபிராமி பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாணவிக்கு பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி நினைவு பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கி பேசினார். அவர் பேசும் போது கால்நடை மருத்துவ படிப்பில் நன்றாக படித்து பல்கலைக்கழக அளவில் சாதித்திட வேண்டும் என்றார். மேலும் மாணவி கால்நடை மருத்துவ படிப்பில் இடம் பெற உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பாரத் கல்வி குழுமங்களின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் செயலாளர் டாக்டர் சந்தோஷ், பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






