வேப்பனப்பள்ளி அருகே வழித்தகராறில் தொழிலாளியை தாக்கிய கணவன், மனைவி கைது

பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
வேப்பனப்பள்ளி அருகே  வழித்தகராறில் தொழிலாளியை தாக்கிய கணவன், மனைவி கைது
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள காட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (வயது 42). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.

இந்நிலையில் திருப்பதி யும் அவரது மனைவி புவனேஸ்வரியும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த தருமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ

மனையில் அனும திக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தருமன் கொடுத்த புகாரின்பேரில் வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து திருப்பதி, புவனேஸ்வரி 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com