என் மலர்
கிருஷ்ணகிரி
- ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- களர்பதி அ.தி.மு.க. சார்பிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் தேவராசன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6.-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மத்தூர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் கலந்து கொண்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், அ.தி.மு.க. ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத் துணைத் தலைவர் வினாயகமூகர்த்தி, ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, ஆனந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணம்மாள் சென்றாயன், கொடமாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சதீஸ், இளம் பாசறை பாண்டியன், தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்,
இதேபோல் களர்பதி அ.தி.மு.க. சார்பிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.
- ஊர்வலமாக காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு வந்தடைந்தனர்.
- மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
காவேரிப்பட்டினம்- பாலக்கோடு பிரிவு சாலையில் இருந்து ஜெயலலிதா உருவ படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு வந்தடைந்தனர்.
பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உருவ படத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், கவுன்சிலர் சங்கீதா கேசவன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
- பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு ஒருங்கி ணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் நல சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
இதற்கு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு பயிற்றுனர்கள் ஜித்தின், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி கல்வித்துறையில் ஒருங்கிணைந்த திட்டத்தில் மாற்று திறன் மாணவர்களுக்காக பணியாற்றும் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய காப்பாளர், ஆயா ஆகியோர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அனைத்து சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய காப்பாளர், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு பயிற்றுனர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இருதுக்கோட்டை கிராமத்தில் போலி மருத்துவர் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த அஸ்வத் நாராயணனை கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை பொறுப்பு தலைமை மருத்துவ அலுவலர் அன்பரசு, ஓசூர் மருந்துகள் சரக ஆய்வாளர் ராஜீவ் காந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இருதுக்கோட்டை கிராமத்தில் போலி மருத்துவர் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மெடிக்கல் ஒன்றின் அருகே தனி அறையில் ஒன்னுக்குறுக்கை கிராமத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணன் (வயது50) என்பவர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் 12-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு முறையான ஆங்கில மருத்துவ கல்வி பயிலாமல் பொதுமக்களை ஏமாற்றி அரசு விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவ குழுவினர் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்திய தண்டனை சட்டப்படி மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த அஸ்வத் நாராயணனை கைது செய்தனர். இந்த ஆய்வின் போது அவரது அறையில் இருந்த ஏராளமான மருத்துவ பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அறையை சீல் வைத்தனர்.
- 200-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
- எருது விடும் விழாவை பல்லுயிர் கலாச்சார விழாவாக அறிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நல சங்க மாவட்ட தலைவர் செல்வம், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில துணை தலைவர் சக்கரபாணி, கனகராஜ், ரத்தினமணி மற்றும் கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி, ராயக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி ஒன்றியங்களை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் எருது விடும் விழா, மஞ்சு விரட்டு, தடுக்கு பண்டிகை நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றிய பிறகும் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை அரசிதழில் சேர்க்கவில்லை. நாட்டு மாடு வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்குவது காலந்தோறும் நடந்து வரும் பல்லுயிர் கலாசார விழாவாகும்.
இதில், மாவட்ட கிராமங்களை சேர்க்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்துகிறது. மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்படாத, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும். எருது விடும் விழாவை பல்லுயிர் கலாச்சார விழாவாக அறிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமான கருத்துக்களை பதிவிட்டு வாதிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாவட்ட மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன.
- அரசு மருத்துவமனையில் மதியழகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகரில் செயல்பட்டு வந்த மாவட்ட மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் வலியுறுத்தியதை தொடர்ந்து மீண்டும் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் மதியழகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அங்கு புறநோயாளி களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் அவசர சிகிச்சை பிரிவும், 100 முதல் 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பாட்டிற்கு வரும். மேலும், இங்கு முதலுதவி சிகிச்சையளித்து, மேல்சிகிச்சைக்காக போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதே போல் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்று வர தேவையான போக்கு வரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் மருத்துவ மனைக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ப வர்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிணற்றில் குழந்தை மதுமிதா உடன் சந்தியா குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
- இதில் குழந்தை மதுமிதா பரிதாபமாக இறந்து போனது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கீரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெயிண்டர் தமிழரசன் (வயது 24). இவரது மனைவி சந்தியா (20). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் மதுமிதா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று ஊருக்கு பின்புறம் உள்ள வீரபத்திரன் என்பவர் கிணற்றில் குழந்தை மதுமிதா உடன் சந்தியா குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதில் குழந்தை மதுமிதா பரிதாபமாக இறந்து போனது. தகவல் விரைந்து வந்த ராயக்கோட்டை தீயணைப்பு துறையினர் சந்தியாவையும். குழந்தையின் உடலை மீட்டனர் . சந்தியா ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- ரத்த வெள்ளத்தில் ஆஞ்சினம்மா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- பிரமோத் ஜனாவை கைது செய்து, ஓசூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட் பட்ட கலுகொண்டப்பள்ளி சுபாஷ் நகரை சேர்ந்தவர் நாகப்பா. இவரது மனைவி ஆஞ்சினம்மா (எ) மேரியம்மா (வயது 43). கணவர் இறந்து விட்டதால், தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி, வீட்டில் ரத்த வெள்ளத்தில் ஆஞ்சினம்மா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சந்தேகத்தின் பேரில், அருகில் வசிக்கும் ஒடிசா மாநிம், சோம்நாத்பூரை சேர்ந்த பிரமோத் ஜனா(22) என்பவரை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, மத்திகிரி போலீசார் நடத்திய விசாரணையில், பிரமோத்ஜனாவிடம் கொலையான ஆஞ்சினம்மா பணம் கேட்டுள்ளார்.
ஆனால், பிரமோத்ஜனா தன்னிடம் பணம் இல்லை என கூறியும், தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இரவு இருவரும் குடிபோதையில் இருந்தபோது, ஆஞ்சி னம்மாவை பிரமோத்ஜனா அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திகிரி போலீசார் அவரை தேடி வந்த நிலையில், பிரமோத்ஜனா குஜராத் மாநிலம் மார்பி பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்ய, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூரிடம் சிறப்பு அனுமதி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான தனிப்படை போலீசார், குஜராத் மாநிலத்திற்கு சென்றனர்.
அம்மாநில போலீசார் உதவியுடன், பிரமோத் ஜனாவை கைது செய்து, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஓசூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைந்தனர்.
- பீரோவில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை அடைத்து வைத்தி ருந்தது தெரிய வந்தது.
- நகைகளுக்காக மூதாட்டியை கொன்று பாவல்கான் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
ஓசூர்,
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் பக்கமுள்ள நெரலூரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமேஷ். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரது தாய் பார்வதம்மா (வயது80). தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக, துமகூரு அருகே உள்ள சிரா என்ற ஊரில் இருந்து வந்தார்.
இதனிடையே, அதே குடியிருப்பில் 3-வது மாடியில் தனியாக வசித்து வந்த பாவல் கான் என்ற முஸ்லீம் பெண், இவர்களது குடும்பத்திற்கு பழக்கமானார்.
இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தைகளை பள்ளியில் விட்டு வர சென்ற ரமேசின் மனைவி ஜோதி, தான் திரும்பி வரும் வகையில் மூதாட்டியை பார்த்துக்கொள்ளுமாறு பாவல்கானிடம் சொல்லி சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய அவர், வீட்டில் மூதாட்டி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பாவல் கானும் தலைமறைவாகியிருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாவல்கான் வீட்டுக்கு சென்று உள்ளே ஆய்வு செய்தபோது, பீரோவில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை அடைத்து வைத்தி ருந்தது தெரிய வந்தது.
அவர் அணிந்திருந்த 70 கிராம் அளவிலான தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொன்று பாவல்கான் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
மேலும் அங்கு கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். தலைமறைவாகி உள்ள பாவல்கானை, கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாக எஸ்.பி. மல்லிகார்ஜுன பால்தண்டி தெரிவித்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் -முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீ ராமுலு, மாவட்டத் துணைச் செயலாளர் மது, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராதா கார்த்திக், கிருஷ்ணகிரி நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், முனியப்பன், ஆறுமுகம், வடிவேலு, நாகராஜன், அழகேசன், பிரேம்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் சின்னசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாபு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் மோகன், தலைமை கழகப் பேச்சாளர் விநாயகம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- பீரோவில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
- தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொன்று பாவல்கான் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் பக்கமுள்ள நெரலூரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமேஷ். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரது தாய் பார்வதம்மா (வயது80). தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக, துமகூரு அருகே உள்ள சிரா என்ற ஊரில் இருந்து வந்தார்.
இதனிடையே, அதே குடியிருப்பில் 3-வது மாடியில் தனியாக வசித்து வந்த பாவல் கான் என்ற முஸ்லீம் பெண், இவர்களது குடும்பத்திற்கு பழக்கமானார்.
இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தைகளை பள்ளியில் விட்டு வர சென்ற ரமேசின் மனைவி ஜோதி, தான் திரும்பி வரும் வகையில் மூதாட்டியை பார்த்துக்கொள்ளுமாறு பாவல்கானிடம் சொல்லி சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய அவர், வீட்டில் மூதாட்டி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பாவல் கானும் தலைமறைவாகியிருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாவல்கான் வீட்டுக்கு சென்று உள்ளே ஆய்வு செய்தபோது, பீரோவில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவர் அணிந்திருந்த 70 கிராம் அளவிலான தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொன்று பாவல்கான் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
மேலும் அங்கு கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். தலைமறைவாகி உள்ள பாவல்கானை, கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாக எஸ்.பி. மல்லிகார்ஜுன பால்தண்டி தெரிவித்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.அரசு பஸ் லாரியின் பின்புறம் மோதிவிட்டது.
- தீபிகா (வயது 22) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
பெங்களூரு-சென்னை சாலையில் ஓசூர் ஹட்கோ அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் லோடு ஏற்றிய கண்டைனர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதற்குப்பின்னால் அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.இதை எதிர்பார்க்காத அரசு பஸ் லாரியின் பின்புறம் மோதிவிட்டது.
இதில் பஸ்ஸில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகள் தீபிகா (வயது 22) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பஸ் டிரைவர் ஸ்ரீதர் படுகாயம் அடைந்தார்.
அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பஸ்ஸின் நடத்துனர் வெங்கடேசன் தந்த புகாரின் பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.






