என் மலர்
நீங்கள் தேடியது "அவசர சிகிச்சை பிரிவு விரைவில் செயல்படும்"
- மாவட்ட மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன.
- அரசு மருத்துவமனையில் மதியழகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகரில் செயல்பட்டு வந்த மாவட்ட மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் வலியுறுத்தியதை தொடர்ந்து மீண்டும் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் மதியழகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அங்கு புறநோயாளி களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் அவசர சிகிச்சை பிரிவும், 100 முதல் 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பாட்டிற்கு வரும். மேலும், இங்கு முதலுதவி சிகிச்சையளித்து, மேல்சிகிச்சைக்காக போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதே போல் மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்று வர தேவையான போக்கு வரத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் மருத்துவ மனைக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ப வர்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






