என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் சம்பவம்:  நகைக்காக மூதாட்டியை கொன்று உடலை   பீரோவில் வைத்துவிட்டு தப்பியோடிய பெண்
    X

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் சம்பவம்: நகைக்காக மூதாட்டியை கொன்று உடலை பீரோவில் வைத்துவிட்டு தப்பியோடிய பெண்

    • பீரோவில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை அடைத்து வைத்தி ருந்தது தெரிய வந்தது.
    • நகைகளுக்காக மூதாட்டியை கொன்று பாவல்கான் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் பக்கமுள்ள நெரலூரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமேஷ். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரது தாய் பார்வதம்மா (வயது80). தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக, துமகூரு அருகே உள்ள சிரா என்ற ஊரில் இருந்து வந்தார்.

    இதனிடையே, அதே குடியிருப்பில் 3-வது மாடியில் தனியாக வசித்து வந்த பாவல் கான் என்ற முஸ்லீம் பெண், இவர்களது குடும்பத்திற்கு பழக்கமானார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தைகளை பள்ளியில் விட்டு வர சென்ற ரமேசின் மனைவி ஜோதி, தான் திரும்பி வரும் வகையில் மூதாட்டியை பார்த்துக்கொள்ளுமாறு பாவல்கானிடம் சொல்லி சென்றுள்ளார்.

    பின்னர் வீடு திரும்பிய அவர், வீட்டில் மூதாட்டி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பாவல் கானும் தலைமறைவாகியிருந்தார்.

    இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாவல்கான் வீட்டுக்கு சென்று உள்ளே ஆய்வு செய்தபோது, பீரோவில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை அடைத்து வைத்தி ருந்தது தெரிய வந்தது.

    அவர் அணிந்திருந்த 70 கிராம் அளவிலான தங்க நகைகளுக்காக மூதாட்டியை கொன்று பாவல்கான் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

    மேலும் அங்கு கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், ஸ்க்ரூ டிரைவர் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். தலைமறைவாகி உள்ள பாவல்கானை, கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாக எஸ்.பி. மல்லிகார்ஜுன பால்தண்டி தெரிவித்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×