என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களர்பதி, மத்தூரில்  ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
    X

    மத்தூர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு ஒன்றிய செயலாளர் தேவராசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    களர்பதி, மத்தூரில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

    • ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • களர்பதி அ.தி.மு.க. சார்பிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் தேவராசன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6.-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மத்தூர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் கலந்து கொண்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், அ.தி.மு.க. ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத் துணைத் தலைவர் வினாயகமூகர்த்தி, ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, ஆனந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணம்மாள் சென்றாயன், கொடமாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சதீஸ், இளம் பாசறை பாண்டியன், தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்,

    இதேபோல் களர்பதி அ.தி.மு.க. சார்பிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.

    Next Story
    ×