என் மலர்
நீங்கள் தேடியது "ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்"
- கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
- பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு ஒருங்கி ணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் நல சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
இதற்கு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு பயிற்றுனர்கள் ஜித்தின், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளி கல்வித்துறையில் ஒருங்கிணைந்த திட்டத்தில் மாற்று திறன் மாணவர்களுக்காக பணியாற்றும் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய காப்பாளர், ஆயா ஆகியோர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அனைத்து சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய காப்பாளர், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு பயிற்றுனர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






