என் மலர்
கிருஷ்ணகிரி
- ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு,கல்லுரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,கல்லுரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.
இதில், ஜெஸ்பர் ஆப்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனர் புஷ்ப ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி, பயிற்சியின் பயன்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் விழாவில், துறை தலைவர்கள் புவியரசு, சுபா, திவாகர், தினேஷ் பாபு, நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில்,மின்னியல் துறை தலைவர் பாலாஜி பிரகாஷ் நன்றி கூறினார்.
- கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை (வியாழக்கிழமை) உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை, மின்சாரம் இருக்காது.
ஓசூர்,
ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை (வியாழக்கிழமை) உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை, ஓசூர் காமராஜ் காலனி, அண்ணா நகர், பஸ் நிலையம், ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், நியூ ஹட்கோ, டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்டு - 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரேபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கியதில் அவர் இறந்தார்.
- சித்ராவுக்கு, கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக, 3 மாதம் சிறை, 500 ரூபாய் அபராதம், தாக்கிய குற்றத்திற்காக ஓராண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த துடுக்கனஹள்ளி முத்தூரான் கொட்டாயை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). இவரது கணவர் திருப்பதி. இவர் கடந்த, 2016-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இவரது குடும்ப சொத்துக்களை திருப்பதியின் அண்ணன் கோவிந்தசாமி (55) பராமரித்து வந்தார். சொத்து பிரிப்பதில் லட்சுமியுடன் அவருக்கு பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் கோவிந்தசாமி அவரது மகன் சக்தி பராசக்தி (29), மருமகள் சித்ரா (26) ஆகியோர் லட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கியதில் அவர் இறந்தார்.
இது குறித்து கே.ஆர்.பி., அணை போலீசார் வழக்கு பதிந்த நிலையில் கோவிந்தசாமி கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சுதா தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தசாமி அவரது மகன் சக்தி பராசக்தி ஆகியோருக்கு பொது இடத்தில் ஆபாசமாக பேசியதற்காக, மூன்று மாத சிறை, 500 ரூபாய் அபராதம், ஆயுதங்களால் தாக்கிய குற்றத்திற்காக, 2 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் கொலை குற்றத்திற்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்தார்.
சித்ராவுக்கு, கொலை செய்யப்பட்ட பெண்ணை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக, 3 மாதம் சிறை, 500 ரூபாய் அபராதம், தாக்கிய குற்றத்திற்காக ஓராண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் இவர்கள் மூவரும் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தர விட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.
- மனைவியிடம் செல்போனில் பேசிய வடிவேல், நீ உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே இறங்கி விடு. அங்கு கார் வைத்திருக்கிறேன். உன்னை அழைத்து செல்கிறேன் என கூறினார்.
- போலீசார் அங்கு சென்று வடிவேல் உள்ளிட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் தப்பியோடி விட்டார். 8 பேர் சிக்கினர்.
ராயக்கோட்டை,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மல்லப்பட்டி அருகே போயர்சாலையை சேர்ந்தவர் வடிவேல் (வயது40). கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மாது (36). வடிவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மாது ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மதகேரியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருடன் வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த மாது கணவனை கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கொல்ல முயற்சி வடிவேல் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து பணத்தை பறித்து சென்று வந்துள்ளார்.
இதற்கிடையே மாது, சிறுக சிறுக சேமித்து வைத்திருக்கும் பணத்தை அபகரிக்க வடிவேல் திட்டமிட்டார். மனைவியை கொன்று விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கலாம் என வடிவேல் திட்டம் போட்டார்.
இதற்காக அவர் தனது மனைவியிடம் கடந்த சில நாட்களாக அன்பாக பேசி வந்துள்ளார். கணவரின் சூழ்ச்சியை அறியாத மாதுவும் தனது கணவர் திருந்தி விட்டார் என நம்பினார்.
நேற்று வடிவேல் தனது மனைவியை ராயக்கோட்டைக்கு வருமாறும், அங்கு உனக்கு நகை வாங்கி தருகிறேன் என கூறினார். மேலும் உன்னிடம் இருக்கும் பணத்தையும் எடுத்து வருமாறு கூறினார். பணத்துடன் சென்றார் இதை நம்பி மாது, தான் சேர்த்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு பஸ்சில் ராயக்கோட்டைக்கு சென்றார்.
அப்போது மனைவியிடம் செல்போனில் பேசிய வடிவேல், நீ உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே இறங்கி விடு. அங்கு கார் வைத்திருக்கிறேன். உன்னை அழைத்து செல்கிறேன் என கூறினார். இதை நம்பி மாதுவும் உடையாண்டஅள்ளியில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது வடிவேல் தனது கூட்டாளிகள் 8 பேருடன் 2 கார்களில் அங்கு காத்திருந்தார். அவர்கள் மாதுவிடம் நீ வைத்திருக்கும் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் மாது பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்கள் பணத்தை பறித்து கொண்டு மாதுவை கொலை செய்ய முயன்றனர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து வடிவேல் உள்பட 9 பேரும் 2 கார்களில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மாது தனது உறவினர்கள் உதவியுடன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்.
மேலும் கார் எண்களை வைத்து வடிவேல் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடினர். அப்போது அவர்கள் நாகமங்கலம் அருகே ஊடேதுர்க்கம் காப்புகாடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று வடிவேல் உள்ளிட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் தப்பியோடி விட்டார். 8 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆயுதங்கள் பறிமுதல் அப்போது அவர்கள் மாதுவின் கணவர் வடிவேல், எச்செட்டிப்பள்ளி ரமேஷ் (40), கவுதாளம் ஜேம்ஸ் (30), கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (30), வெள்ளிச்சந்தை காமராஜ் நகர் சந்திரசேகர் (32), போயர் சாலையை சேர்ந்த ராம்ராஜ் (31), ஈஸ்வரன் (38), தண்டுகாரனள்ளியை சேர்ந்த விஜயகாந்த் (28) ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேல் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 கத்தி, 2 அரிவாள், உருட்டு கட்டை, ரூ.50 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 8 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.
- ஐதராபாத்தில் மாநிலங் களுக்கு இடையேயான குங்பூ ஜூனியர் போட்டி நடைபெற்றது.
- தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
ஐதராபாத்தில் மாநிலங் களுக்கு இடையேயான குங்பூ ஜூனியர் போட்டி நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் நவதர்ஷினி, தன்யாஸ்ரீ, தேவிபிரியா, சோபன் சுந்தர் ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஜூடோ பிரிவில் ஆதித்யா ராஜ் வெற்றி பெற்று தென்னிந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்கேட்டிங் சப்ஜூனியர் பிரிவில் ஹரிஷ், ஜெயக்குமார், இளையக்கனி ஆகியோர் வெற்றி பெற்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பஞ்சாபில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் சோபன் சுந்தர், தேவிப்பிரியா ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று தேசிய அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் டாக்டர் சந்தோஷ், முதல்வர் ஹரிநாத், போட்டியின் பயிற்சியாளர் ரஹமத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.
- இவர் நேற்று 6-ந்தேதி வீட்டை விட்டு மாயமானார்.
- எனது மகளை கடிபாளையம் பகுதியை சேர்ந்த குமரேஷ் (20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி சிப்பால்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி. இவர் நேற்று 6-ந்தேதி வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் எனது மகளை கடிபாளையம் பகுதியை சேர்ந்த குமரேஷ் (20) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், முருகப்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- அவரிடம் இருந்த பேக்கில் 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், முருகப்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பேக்கில் 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், முருகப்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- அவரிடம் இருந்த பேக்கில் 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், முருகப்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பேக்கில் 14 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- நெய்தீபத்தை ஏந்தியவாறு பிரகாஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
- மலைக்கோவிலின் ஒரு பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
ஓசூர்,
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதில் உதவி கலெக்டர் சரண்யா, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ் மற்றும் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ஜி.ராமு உள்பட பலர் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.
முன்னதாக நாதஸ்வர வாத்தியம் முழங்க, நெய்தீபத்தை ஏந்தியவாறு பிரகாஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, மலைக்கோவிலின் ஒரு பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் தீபத்தை தரிசித்து, அரோகாரா, அரோகரா சிவனே போற்றி போற்றி என்று பக்தி முழக்கமிட்டனர்.
தொடர்ந்து மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
விழாவையொட்டி மலைக் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் தீபத் திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
- கிராமங்களுக்குள் புகுந்து இரவு நேரங்கில் அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
- காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கர்நாடகாவில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் இடம்பெயர்ந்துள்ளது. இதனால் அந்த காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓசூர் அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளது. இந்த வனப்பகுதியையொட்டி கிராமங்களுக்குள் புகுந்து இரவு நேரங்கில் அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
கிராமத்திற்குள் மீண்டும் புகுந்து நேற்று காட்டுயானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியுள்ளது. பின்னர் கிராமத்திற்குள் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்ததால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- கல்வி வளர்ச்சியிலும் ஈடுபாட்டுடன் செயல்ப டுவது குறிப்பிடத்தக்கது.
- ரூ.2.4 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் மகளிர் சுயஉத விக்குழு உறுப்பினர்களின் மேம்பாடு மட்டுமன்றி உறுப்பினர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியிலும் ஈடுபாட்டுடன் செயல்ப டுவது குறிப்பிடத்தக்கது.
அவற்றுள் ஒன்று விதவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம். ஐ.வி.டி.பி. உறுப்பினர்களில் கணவரை இழந்து மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் உறுப்பினர்களுக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
உறுப்பினர்களின் 260 அந்த வகையில் 4-ந்தேதி நடைபெற்ற உதவித்தொகை வழங்கும் விழாவில் ஐ.வி.டி.பி. சுயஉதவிக்குழு விதவை குழந்தைகளுக்கு தலா.ரூ.10,000 என மொத்தம் ரூ.26 லட்சம் உதவித்தொகையை ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
இக்கல்வி உதவித் தொகையை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவர் இத்திட்டத்தில் பயன் பெறும் மாணவர்கள் நன்றாக படிப்பதுடன், தனது எண்ணத்தாலும், செய ல்களாலும் இரக்கமுள்ள வர்களாக திகழ்ந்து ஏழை எளியோர்க்கு உதவ முன் வருதல் வேண்டும்.
அதை உணர்த்துவ தற்காகவே இந்த கல்வி உதவித்தொகை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.2.4 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுண்டம்பட்டி அந்தோணி யார் ஆலய பங்குத்தந்தை ஜார்ஜ் , கிருஷ்ணகிரி மாவட்ட ஒய்வு பெற்ற முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
- ஐந்து மாநிலங்களில் இருந்து 4585 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 13 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
மத்தூர்,
சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையிலான தென்மண்டல அளவிலான செஸ் போட்டி சென்னையில் கடந்த 29 முதல் 2-ந்தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் உட்பட ஐந்து மாநிலங்களில் இருந்து 4585 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியிலிருந்து 13 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
5 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சித்தார்த் மற்றும் ஹரிஷ்வா 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சரவண பாலாஜி ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர். 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மோகித் இரண்டாம் இடம் பெற்று சாதனை புரிந்தார்.
போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய, இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அதியமான் பப்ளிக் பள்ளியில் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
அதில் அதியமான் கல்வி நிறுவனங்களிள் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய அனைத்து மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர் ஆகியோரை பாராட்டினர்.
மேலும் கூடுதலாக பயிற்சியும், தொடர் முயற்சியும் மேற்கொண்டு வரும் ஆண்டில் முதலிடம் பிடித்து தேசிய அளவிலும் பின் நம் தாய் நாட்டிற்காக விளையாடும் அரிய வாய்ப்பினை பெற அயராது முனைப்புடன் பயிற்சி பெற வேண்டும் என உற்சாக மூட்டினார்கள். போட்டியில் பங்கேற்ற, சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.






