என் மலர்
கிருஷ்ணகிரி
- கார்த்திகை தினத்தை முன்னிட்டு சூளகிரி மலை மீது தீபம் எற்றுவது வழக்கம்.
- பல பகுதி குடியிருப்புகளுக்கு சென்று நேர்த்தி கடன் எண்னையை வாங்கி சென்று மலை மீது தீபம் ஏற்றினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி ஊராட்சியை சேர்ந்த வாணியர் தெரு மக்கள் ஆண்டு தோறும் கார்த்திகை தினத்தை முன்னிட்டு சூளகிரி மலை மீது தீபம் எற்றுவது வழக்கம்.
அது போல கார்த்திகை தினம் என்பதால் சூளகிரி ஒசூர் சாலை, கீழ் தெரு, கோட்டை தெரு, வாணியர் தெரு, ஒசூர் கிருஷ்ணகிரி சாலை மற்றும் பல பகுதி குடியிருப்புகளுக்கு சென்று நேர்த்தி கடன் எண்னையை வாங்கி சென்று மலை மீது தீபம் எற்றினர்.
- இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சிணை இருந்து வந்துள்ளது.
- ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் இரும்பு கம்பியால் முத்துவேடியம்மாளை சரமாரியாக தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே தேவர் முக்குளம் அடுத்துள்ள ஊத்துபள்ளம் பகுதியை சேர்ந்தவர் முத்துவேடியம்மாள் (வயது58). விவசாயியான இவரது மகன் கூத்துராஜா.
இவரும், கிருஷ்ணகிரி கே.பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (32) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சிணை இருந்து வந்துள்ளது.
இதனால் நேற்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் இரும்பு கம்பியால் முத்துவேடியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
- நேற்று முன்தினம் வீட்டின் அருகே ராேஜஷ் இறந்து கிடந்தார்.
- இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை யில் உள்ள பசும்ெபான் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ராேஜஷ் (வயது23). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே ராேஜஷ் இறந்து கிடந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ராேஜஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட மல்லப்பா நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள இருதுகோட்டை பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (வயது49). இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளன. தற்போது மல்லப்பா 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மல்லப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட மல்லப்பா நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஐந்து மாநிலங்க ளிலிருந்து பத்தாயி ரத்துக்கு அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றன.
- அதியமான் பப்ளிக் பள்ளி பதினோறாம் வகுப்பு மாணவி யோக ஜனலியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, அதியமான் பப்ளிக் பள்ளி மாணவி தென்மண்டல அளவிலான தடகளப் போட்டி யில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
சி.பி.எஸ்.இ. பள்ளி களுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான தடகளப் போட்டி கள் சென்னை நேரு விளையாட்ட ரங்கில் டிசம்பர் 4 முதல் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் உட்பட ஐந்து மாநிலங்க ளிலிருந்து பத்தாயி ரத்துக்கு அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அதியமான் பப்ளிக் பள்ளி பதினோறாம் வகுப்பு மாணவி யோக ஜனலியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மிகச் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
- நிலை தடுமாறி சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.
- சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கஞ்சகொண்டாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அப்துல்சாகிப் (வயது29). இவர் செருப்பு வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் உள்ள சென்டர் மீடியன் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அப்துல்சாகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
- 21 வயது கல்லூரி மாணவி. இவர் கடந்த 5-ந்தேதி அன்று வீட்டை விட்டு மாயமானார்.
- போலீசில் எனது மகளை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கடந்த 5-ந்தேதி அன்று வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் எனது மகளை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தஞ்சாவூர் மாவட்டம், திருவையார் மேலபுடவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வம். டிரைவரான இவர் நேற்று திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலையில் கிருஷ்ணகிரி வேட்டியம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அன்புசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- எதிர்பாராதவிதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது.
- சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பெரியகொட்டாகுளம் அடுத்துள்ள வைரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது28). லாரி டிரைவரான இவர் ஏர்ரம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் லாரியை ஓட்டி வந்தார்.
நேற்று ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அங்கு ரஞ்சித்குமார் லாரியின் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள தீர்த்தகிரியை சேர்ந்த செல்வம் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள தீர்த்தகிரியை சேர்ந்த செல்வம் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- பாகலூரில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.
- முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
ஒசூர் அருகே பாகலூரில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.
இதில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலா ளரும், முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் இதில், ஒசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரவிக்குமார், ஒசூர் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய இணை செயலாளருமான சசி வெங்கடசாமி, ஒன்றிய கவுன்சிலர் முனிரத்னா முனிராஜ், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை உள்பட பலர் கலந்துக்கொண்டனர்
- நேற்று தனது மகனை ராஜா கண்டித்து உள்ளார்.
- மனமுடைந்து காணப்பட்ட தமிழரசன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தமிழரசன். கூலி தொழி லாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று தனது மகனை ராஜா கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தமிழரசன் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






