என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு
- எதிர்பாராதவிதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது.
- சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பெரியகொட்டாகுளம் அடுத்துள்ள வைரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது28). லாரி டிரைவரான இவர் ஏர்ரம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் லாரியை ஓட்டி வந்தார்.
நேற்று ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அங்கு ரஞ்சித்குமார் லாரியின் மீது ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரஞ்சித்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






