என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பி.எஸ்.சி. தென்மண்டல தடகளப் போட்டியில்   அதியமான் பப்ளிக் பள்ளி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்
    X

    சி.பி.எஸ்.சி. தென்மண்டல தடகளப் போட்டியில் அதியமான் பப்ளிக் பள்ளி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்

    • ஐந்து மாநிலங்க ளிலிருந்து பத்தாயி ரத்துக்கு அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றன.
    • அதியமான் பப்ளிக் பள்ளி பதினோறாம் வகுப்பு மாணவி யோக ஜனலியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, அதியமான் பப்ளிக் பள்ளி மாணவி தென்மண்டல அளவிலான தடகளப் போட்டி யில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    சி.பி.எஸ்.இ. பள்ளி களுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான தடகளப் போட்டி கள் சென்னை நேரு விளையாட்ட ரங்கில் டிசம்பர் 4 முதல் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் உட்பட ஐந்து மாநிலங்க ளிலிருந்து பத்தாயி ரத்துக்கு அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அதியமான் பப்ளிக் பள்ளி பதினோறாம் வகுப்பு மாணவி யோக ஜனலியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    மிகச் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன், செயலர் சோபா திருமால் முருகன், நிர்வாக இயக்குநர் சீனி. கணபதி ராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

    Next Story
    ×