கிருஷ்ணகிரியில் வாலிபர் மர்மச்சாவு

நேற்று முன்தினம் வீட்டின் அருகே ராேஜஷ் இறந்து கிடந்தார்.இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் வாலிபர் மர்மச்சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை யில் உள்ள பசும்ெபான் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ராேஜஷ் (வயது23). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே ராேஜஷ் இறந்து கிடந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ராேஜஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com