என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே பெண்ணை கொன்ற வழக்கில் தேடப்பட்ட வாலிபர் 4 மாதங்களுக்கு பிறகு ஒடிசாவில் கைது
- ரத்த வெள்ளத்தில் ஆஞ்சினம்மா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- பிரமோத் ஜனாவை கைது செய்து, ஓசூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட் பட்ட கலுகொண்டப்பள்ளி சுபாஷ் நகரை சேர்ந்தவர் நாகப்பா. இவரது மனைவி ஆஞ்சினம்மா (எ) மேரியம்மா (வயது 43). கணவர் இறந்து விட்டதால், தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி, வீட்டில் ரத்த வெள்ளத்தில் ஆஞ்சினம்மா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சந்தேகத்தின் பேரில், அருகில் வசிக்கும் ஒடிசா மாநிம், சோம்நாத்பூரை சேர்ந்த பிரமோத் ஜனா(22) என்பவரை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, மத்திகிரி போலீசார் நடத்திய விசாரணையில், பிரமோத்ஜனாவிடம் கொலையான ஆஞ்சினம்மா பணம் கேட்டுள்ளார்.
ஆனால், பிரமோத்ஜனா தன்னிடம் பணம் இல்லை என கூறியும், தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இரவு இருவரும் குடிபோதையில் இருந்தபோது, ஆஞ்சி னம்மாவை பிரமோத்ஜனா அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திகிரி போலீசார் அவரை தேடி வந்த நிலையில், பிரமோத்ஜனா குஜராத் மாநிலம் மார்பி பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்ய, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூரிடம் சிறப்பு அனுமதி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு தலைமையிலான தனிப்படை போலீசார், குஜராத் மாநிலத்திற்கு சென்றனர்.
அம்மாநில போலீசார் உதவியுடன், பிரமோத் ஜனாவை கைது செய்து, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஓசூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைந்தனர்.






