என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ஓ.பி.எஸ். அணி சார்பில்  ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
    X

    கிருஷ்ணகிரியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

    • நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் -முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீ ராமுலு, மாவட்டத் துணைச் செயலாளர் மது, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராதா கார்த்திக், கிருஷ்ணகிரி நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், முனியப்பன், ஆறுமுகம், வடிவேலு, நாகராஜன், அழகேசன், பிரேம்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் சின்னசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாபு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் மோகன், தலைமை கழகப் பேச்சாளர் விநாயகம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×