என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பஸ் மோதி இளம்பெண் பலி-டிரைவர் காயம்
- லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.அரசு பஸ் லாரியின் பின்புறம் மோதிவிட்டது.
- தீபிகா (வயது 22) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
பெங்களூரு-சென்னை சாலையில் ஓசூர் ஹட்கோ அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் லோடு ஏற்றிய கண்டைனர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதற்குப்பின்னால் அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.இதை எதிர்பார்க்காத அரசு பஸ் லாரியின் பின்புறம் மோதிவிட்டது.
இதில் பஸ்ஸில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகள் தீபிகா (வயது 22) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பஸ் டிரைவர் ஸ்ரீதர் படுகாயம் அடைந்தார்.
அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பஸ்ஸின் நடத்துனர் வெங்கடேசன் தந்த புகாரின் பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






