என் மலர்
கிருஷ்ணகிரி
- மினிவேன் மீது மோதி விட்டார்.இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
- காரில் பயணித்த 6 பேரும் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
பெங்களூரு லிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்.
இவர் தனது காரில் தனலட்சுமி(வயது 52), விஜயகுமார் (35), ஷோபா (33),வினோத்குமார் (11),நவ்யாஸ்ரீ (40) ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காரில் ஊருக்கு கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலையில் கார் வந்தபோது ஜெகநாதன் என்பவர் ஒட்டி சென்ற மினிவேன் மீது மோதி விட்டார்.இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில் காரில் பயணித்த 6 பேரும் காயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து மினிவேன் டிரைவர் ஜெகநாதன் கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
- அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தளபள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்.இவரது மனைவி ஆர்த்தி (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 9-ந்தேதி இதே போல ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஆர்த்தி விஷம் குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தானநிலையில் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருமணமாகி 7 வருடங்களுக்குள் பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து ஏ.எஸ்.பி.அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
- அனைத்து வாகனங்க ளையும் போலீசா ரால் சோதனையிட முடிவதில்லை.
- டோல்கேட்டுகளில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தினால் அரசுக்கு வருவாய் இழப்பும் தவிர்க்கப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம், பெங்களூருலிருந்து கிருஷ்ணகிரி வழியாக பால் வண்டிகளில் கர்நாடக மது வகைகள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு காவல்து றையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சிவலிங்கம் உத்தரவின் பேரில் மதுவி லக்கு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி தலைமையில், மதுவிலக்கு போலீசார் கிருஷ்ணகிரி பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி டோல்கேட் வழியாக பால் ஏற்றி வந்த மகேந்திரா பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டனர்.
அதில், பால் கேன்களுக்கு பின்புறம், 80 அட்டை பெட்டிகளில், 7,680 கர்நாடக மது பாக்கெட்டுகளில் 700 லிட்டர் கர்நாடக மது வகைகள் இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு சுமார். 4 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து வேனை ஓட்டி வந்த ஓசூர், தொரப்பள்ளி ஹரிஷ், மற்றும் மது கடத்தலில் ஈடுபட்ட மத்திகிரி குருப்பட்டி தர்மராஜ், ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பிக்கப் வேனுடன், கர்நாடக மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கர்நாடக மாநிலத்திலிருந்து திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரைக்கு கர்நாடக மது வகைகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இது தொடர்பாக மேலும் சிலரை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து கலால் டி.எஸ்.பி., சிவலிங்கம் கூறுகையில், எங்களுக்குகிடைக்கும் ரகசிய தகவல் பேரில், குறிப்பிட்ட வாகனங்களை மடக்கி மது கடத்தலை தடுத்து வருகிறோம். ஆனால் அனைத்து வாகனங்க ளையும் போலீசா ரால் சோதனையிட முடிவதில்லை.
டோல்கேட்டுகளில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தினால் மேலும் பல கும்பல் பிடிபடுவதோடு, அரசுக்கு வருவாய் இழப்பும் தவிர்க்கப்படும் என்றார்.
- மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
- 14 வீராங்கனைகள் தேர்வு செய்தவற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள கூடைப்பந்து(ஆண், பெண்), கைப்பந்து (ஆண், பெண்), கால்பந்து (பெண்), ஆக்கி (ஆண்), கோ-கோ (பெண்) ஆகிய விளையாட்டுகளில் தமிழக அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
அதன்படி, வருகிற 13-ந் தேதி காலை 7 மணிக்கு கால்பந்து போட்டிக்கான 20 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை ஜவகர்லால் நேரு
ஸ்டேடியத்திலும், ஆக்கி போட்டிக்கான 18 வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி திருச்சி அறிஞர் அண்ணா ஸ்டேடியத்திலும், கோ-கோ போட்டிக்கு 15 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வி பயிற்சி கல்லூரியிலும், கைப்பந்து போட்டி 14 வீரர்கள், 14 வீராங்கனைகள் தேர்வு செய்தவற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது.
14-ந் தேதி காலை 7 மணிக்கு கூடைப்பந்து போட்டி 12 வீரர்கள், 12 வீராங்கனைகள் தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டி சென்னை நேரு உள் விளையாட்ட அரங்கிலும் நடைபெறுகிறது. இந்த மாநில அளவிலான தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு, வீரர், வீராங்கனைகள் 1.1.2004-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு, மேல்நிலைப்பள்ளி சான்றிதழ், 5 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி அல்லது கிராம ஊராட்சி ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட பிறப்புச்சான்றிதழ், இந்த மூன்றில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.
போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் தவிர்க்க முடியாக காரணத்தால் வர முடியாத நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாநில தேர்வுப்போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு தினப்படி, பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற தயாளன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- தயாளனின் மனைவி நர்மதா சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 32).கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற தயாளன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் விசாரித்தும் தயாளன் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தயாளனின் மனைவி நர்மதா சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து மாயமான தயாளனை தேடி வருகிறார்.
- நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- குடிபோதையில் விஜயாவை கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகேயுள்ள தலியள்ளி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயா (வயது 50).இதே பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.இவர்களிடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் எதிரொலியாக பன்னீர்செல்வம் குடிபோதையில் விஜயாவை கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள விஜயா கொடுத்த புகாரின்பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும்.
- ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட (ஆண்/பெண்) 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அக்குழுவிற்க ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்கு வதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள மேற்காணும் இனத்தை சேர்ந்தவர்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்து, பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர், மிகப்பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-க்கு பரிந்துரை செய்யப்படும். இதில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகள் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள்அ மைத்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்.11) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.
- ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நடந்த சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பஸ்கள், ஆட்டோக்களில் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி பெங்களூரு சாலை வழியாக சாந்தி திருமண மண்டபம் அருகில் நிறைவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட அலுவலர் ஜாகீர்உசேன் முன்னிலை வகித்தார்.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமான கடந்த நவம்பர் 25-ந்தேதியன்று இந்திய குடியரசு தலைவரால் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது. மேலும், சர்வதேச மனித ஒற்றுமை தினமான டிசம்பர் 23-ந் தேதி வரை 3 வார காலம் இந்த விழிப்புணர்வு பணிகள் நடைபெற உள்ளது.
குழந்தை திருமணம் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றால் தனி நபர் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை தடை செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுளள அனைத்து வட்டாரங்கள், ஊராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் துண்டு பிரசுரங்கள், பேரணி, சுவர் விளம்பரம் நாடகம், குறும்படம் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இவ்வாறு கூறினார். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி, உதவி திட்ட அலுவலர்கள் பிரபாகர், சந்தோசம், ராஜீவ்காந்தி, பெருமாள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.
- தி.மு.க., அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட பேரவை செயலாளர் கே.ஆர்.சி. தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினார்கள். ஒன்றிய செயலாளர் வேடி நன்றி கூறினார்.
கூட்டத்தில், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகிய வற்றிற்காக தி.மு.க., அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், 13-ந் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதியிலும், 14-ந் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
கடந்த 5-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் அ.தி.மு.க., சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கலந்து கொள்ள அழைப்புவிடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சாலை ஒரமாக வளர்ப்பு பன்றிகளை வளர்த்து வருகின்றனர்.
- பன்றிகளை வளர்க்க தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி பேருந்து நிலையம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலை யில் கிருஷ்ணகிரி-ஒசூர் சர்வீஸ் சாலை ஒரமாக வளர்ப்பு பன்றிகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த பன்றிகள் சாலைகளை கடந்து சூளகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் குட்டைக்கு வந்து அங்கு உள்ள கழிவுகளை சாப்பிட்டுவிட்டு சாலைகளில் அங்கும், இங்கும் திரிவதால் வாகன ஓட்டிகள் பீதியில் வாகனங்களை இயக்கி வருகின்றனர் .
இரவு நேரங்களில் திடீரென சாலையில் ஒடுவதால் வாகன ஓட்டிளுக்கு விபத்து எற்படும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் பன்றிகளை வளர்க்க தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
- மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, தங்க நாணயங்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் 10-ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, தங்க நாணயங்களை வழங்கினார்.
அதன்படி 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளான அஜய், ஜெயப்பிரகாஷ், ஹரிகரன், வைஷ்ணவி, ஷிரியாஸ்ரீ, ஜோசிகா ஹரிணி, அப்ரோஸ், பிரதீப், பிரியதர்ஷன் ஆகிய மாணவ, மாணவிகள் முதல் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கநாணயங்கள் பரிசாக பெற்றனர்.
தங்க நாணயங்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பள்ளியின் செயலாளர் டாக்டர் சந்தோஷ், இயக்குனர் உஷா சந்தோஷ், பள்ளியின் முதல்வர் ஹரிநாத் ஆகியோர் பாராட்டினார்கள்.
- எனு சோனைக்கு செல்லும் தார்சாலை மிகவும் குறுகலான சாலை.
- வாகனங்கள் அதிக அளவு இப்பகுதி பகுதி கிராமங்களுக்கு சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளப்பள்ளியில் இருந்து எனு சோனைக்கு செல்லும் தார்சாலை மிகவும் குறுகலான சாலை.
சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருவதால் சாலை ஒரமாக இருபுறமும் முள் புதர் அதிக அளவு வளர்ந்து வருவதால் 10 அடி சாலை தற்போது 7 அடியாக மாறி வருவதால் கனரக வாகனங்கள், இருச்ககர வாகனங்கள் அதிக அளவு இப்பகுதி பகுதி கிராமங்களுக்கு சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி ப்படுகின்றனர். இந்த முள் புதர்களை அகற்றி சாலையை விரிவுபடுத்த இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






