என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பால் வண்டியில் கர்நாடக மது பாக்கெட்டுகள் கடத்தி பிடிபட்ட 2 பேர், மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாக்கெட்டுகள்.
டோல்கேட்டுகளில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்: --மது, புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் கோரிக்கை
- அனைத்து வாகனங்க ளையும் போலீசா ரால் சோதனையிட முடிவதில்லை.
- டோல்கேட்டுகளில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தினால் அரசுக்கு வருவாய் இழப்பும் தவிர்க்கப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம், பெங்களூருலிருந்து கிருஷ்ணகிரி வழியாக பால் வண்டிகளில் கர்நாடக மது வகைகள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு காவல்து றையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சிவலிங்கம் உத்தரவின் பேரில் மதுவி லக்கு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி தலைமையில், மதுவிலக்கு போலீசார் கிருஷ்ணகிரி பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி டோல்கேட் வழியாக பால் ஏற்றி வந்த மகேந்திரா பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டனர்.
அதில், பால் கேன்களுக்கு பின்புறம், 80 அட்டை பெட்டிகளில், 7,680 கர்நாடக மது பாக்கெட்டுகளில் 700 லிட்டர் கர்நாடக மது வகைகள் இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு சுமார். 4 லட்சம் ரூபாய் ஆகும். இதையடுத்து வேனை ஓட்டி வந்த ஓசூர், தொரப்பள்ளி ஹரிஷ், மற்றும் மது கடத்தலில் ஈடுபட்ட மத்திகிரி குருப்பட்டி தர்மராஜ், ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பிக்கப் வேனுடன், கர்நாடக மது பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கர்நாடக மாநிலத்திலிருந்து திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரைக்கு கர்நாடக மது வகைகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இது தொடர்பாக மேலும் சிலரை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து கலால் டி.எஸ்.பி., சிவலிங்கம் கூறுகையில், எங்களுக்குகிடைக்கும் ரகசிய தகவல் பேரில், குறிப்பிட்ட வாகனங்களை மடக்கி மது கடத்தலை தடுத்து வருகிறோம். ஆனால் அனைத்து வாகனங்க ளையும் போலீசா ரால் சோதனையிட முடிவதில்லை.
டோல்கேட்டுகளில் வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தினால் மேலும் பல கும்பல் பிடிபடுவதோடு, அரசுக்கு வருவாய் இழப்பும் தவிர்க்கப்படும் என்றார்.






