என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • யானைகள் தமிழக எல்லையில் பல குழுக்களாக பிரிந்து முகாமிட்டு சுற்றி திரிந்து வருகின்றன.
    • இப்பகுதியில் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி, தளி ,பாலதோட்ட பள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் பன்னார் கட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையில் பல குழுக்களாக பிரிந்து முகாமிட்டு சுற்றி திரிந்து வருகின்றன.

    இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேர் வீதி,கும்மளத்தூர், கல்பாலம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று அதிகாலை புகுந்த 35 யானைகள் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்துள்ளது. இதில் மாரப்பா என்பவர் தோட்டத்தில் ரோஜா செடிகளை வளர்த்து விற்பனைக்காக வைத்திருந்தார்.

    அச்செடிகளை காலால் மிதித்து நாசம் செய்துள்ளது இதனால் இப்பகுதியில் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று முகாமிட்டுள்ள 35 யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு அப்பகுதியிலேயே முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, வசந்தபுரம் கிராமத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு போலீசாரை நியமித்துள்ளார்.
    • ஊராட்சி தலைவர் ரங்கநாதனும் கிராமத்தில் அவ்வப்போது பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ளது வசந்தபுரம் கிராமம்.

    இந்த கிராமத்தில் சுமார் 45 குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் 4 வருடத்திற்கு ஒரு முறை ஊர் வழக்கப்படி ஊரில் உள்ள அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று வசந்தபுரம் கிராம மக்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். முதியோர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத சிலர் மட்டுமே தற்போது அந்த கிராமத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் ஊரில் வசிக்கும் பெரும்பாலானோர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றுவிட்டதால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, வசந்தபுரம் கிராமத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு போலீசாரை நியமித்துள்ளார்.

    அதேபோல் ஊராட்சி தலைவர் ரங்கநாதனும் கிராமத்தில் அவ்வப்போது பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

    மேலும் திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு, பகல் என போலீசார் ஊருக்குள் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    ஊரே மொத்தமாக காலி செய்து திருப்பதி கோவிலுக்கு புறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • ராஜாஜியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.

    ஓசூர்,

    மூதறிஞர் ராஜாஜியின் 144 -வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் அவரது இல்லத்தில் உள்ள உருவச்சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, ஒசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் ராஜாஜியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.

    அதேபோல், ராஜாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சீடரும்,'முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் தற்போது தி.மு.க வின் மூத்த பிரமுகருமான பி.வெங்கடசாமி, தனது 87 வயதிலும், தள்ளாடிய நிலையில் கையில் ஊன்றுகோலுடன் ராஜாஜியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    மேலும் விழாவில், துணை மேயர் ஆனந்தய்யா,மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மோகன், ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி,, தொரப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தம்மா, ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தினத்தையொட்டி மாவட்டவருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான வந்தனாகார்க் ஆகியோர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் தாட்கோ மேலாளர் யுவராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட கலெக்டர் அலுவலகமேலாளர் (நீதியியல்) வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • மொத்தம் 57 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலூகா வரட்டனப்பள்ளி அடுத்த குருவிநாயனப்பள்ளி கிராமத்தில் நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் வட்டாட்சியர் அல்லாபகஷ் பாஷா, வட்ட பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்தப் பகுதியில் மக்களின் ரேஷன் கார்டில் புதியதாக உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம், தொலைபேசி எண், முகவரி மாற்றம் என மொத்தம் 57 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

    • கால்நடை பராமரிப்புத்துறை வாகனம் மற்றும் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனம் ஆகிய இரு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.
    • கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர்அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் இரண்டு வாகனங்கள் ஏலம்விடப்படவுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள கிருஷ்ணகிரி உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை வாகனம் மற்றும் நடமாடும் கால்நடை மருந்தக பிரிவு வாகனம் ஆகிய இரு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.

    கழிவுசெய்யப்பட்டுள்ள இரு வாகனங்களும் வருகிற 21-ந் தேதி மாலை 3மணியளவில் கிருஷ்ணகிரிபழைய பெங்களூர் சலையில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர்அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

    மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு, விலைப்புள்ளியை கோரலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகண்ரகுநாதன் மற்றும் போலீசார் நேற்றுகிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து644 மதிப்பிலான, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த காரின் டிரைவரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த தட்டரங்குட்டையை சேர்ந்த விமல் எபினேஷன்(வயது 31) என்பரை கைது செய்துவிசாரணை நடத்தினர்.

    விசாரணையில், புகையிலை பொருட்களை பெங்களூரில் இருந்துபவானிக்கு கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பேரணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார்.
    • புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, காந்தி சிலை வழியாகஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்திஇருசக்கர வாகன பேரணி நடந்தது.

    இந்த பேரணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் சூசன்பெட்ரியியா, மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் தானப்பன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவா வரவேற்புரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் நாராயணன்,மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். நிர்வாகிகள் தங்கதுரை,ஜெகதீசன், ராஜேஸ்குமார், கார்த்திக்ராஜா, ஈஸ்வரி ஆகியோர் பிரச்சார உரையாற்றினார்.மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாதப்பன் ஆகியோர் நிறைவுரையாற்றினர்.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.இந்த பேரணியானது, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, காந்தி சிலை வழியாகஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.

    இந்த பேரணியின் போது, 3, 5, 8-ம்வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வு என்பது நாட்டின்ஏழை, எளிய கிராமப்புறத் குழந்தைகளின் கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதோடு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவரும் நிலையில், அது பற்றி தேசிய கல்விக் கொள்கையில் இல்லாதது இட ஒதுக்கீட்டுப்பிரிவினரின் கல்வி வாய்ப்பை மிக கடுமையாக பாதிக்கும். மும்மொழிக் கொள்கை என்பது கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, தாய்மொழி வழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும். இது போன்ற கோரிக்கைகளை தேச நலன், ஊழியர் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மைதானத்தில் நடத்திக் கொள்ள வேண்டும்.

        தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தி.மு.க.,அ.தி.மு.க, பா.ஜ.க ,காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சி தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சிகளை பழைய பஸ் நிலையம் காவல் கட்டுப்பாட்டு அறை அருகே பந்தல் அமைத்து நடத்திக் கொள்ள வேண்டும்.

    அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மைதானத்தில் நடத்திக் கொள்ள வேண்டும்.

    சிறிய ஆர்ப்பாட்டங்கள் பழைய பஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நடத்திக் கொள்ள வேண்டும்.

    பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைத்துள்ள கடைகளை வியாபாரிகள் அகற்றிக்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • மீலாடி நபி விழாக்குழு தலைவர் அஸ்லம் ரஹ்மான் ஷெரிப் தலைமை வகித்தார்.
    • 300 அய்யப்ப பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி.

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மிலாடி நபி விழாக்குழு சார்பாக வருடா, வருடம் விநாயகர் சதுர்த்தி மற்றும் அய்யப்ப பூஜைக்கு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நேற்று இஸ்லாமிய சகோதரர்கள் அய்யப்பன் கோவில் பூஜைக்கு பொருட்களும், பக்தர்களுக்கு உணவு பரிமாறியும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு மீலாடி நபி விழாக்குழு தலைவர் அஸ்லம் ரஹ்மான் ஷெரிப் தலைமை வகித்தார். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கராமத், ரியாஸ், ஷப்பீர், அஸ்ரப், வாஜித், ஜாபர், ஜலீல் , ரிஸ்வான்,முனீர், அஸ்வத், மற்றும் நிஷாந்த், அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 300 அய்யப்ப பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

    • வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டு சென்ற சதீஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சதீஷை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள பெருமாள்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவரது மகன் சதீஷ் (வயது 23). கூலி தொழிலாளி. கடந்த 5-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டு சென்ற சதீஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து சதீஷின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சதீஷை தேடி வருகின்றனர்.

    இதேபோல் பேரிகை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆதேஷ் (18) என்ற கூலி தொழிலாளி கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கவுரப்பா கொடுத்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஆதேசை தேடி வருகின்றனர்.

    • ஊர் வழக்கப்படி ஊரில் உள்ள அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.
    • இரவு, பகல் என போலீசார் ஊருக்குள் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ளது வசந்தபுரம் கிராமம்.

    இந்த கிராமத்தில் சுமார் 45 குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் 4 வருடத்திற்கு ஒரு முறை ஊர் வழக்கப்படி ஊரில் உள்ள அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று வசந்தபுரம் கிராம மக்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். முதியோர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத சிலர் மட்டுமே தற்போது அந்த கிராமத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் ஊரில் வசிக்கும் பெரும்பாலானோர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றுவிட்டதால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, வசந்தபுரம் கிராமத்தின் பாதுகாப்பிற்காக இரண்டு போலீசாரை நியமித்துள்ளார்.

    அதேபோல் ஊராட்சி தலைவர் ரங்கநாதனும் கிராமத்தில் அவ்வப்போது பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்.

    மேலும் திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு, பகல் என போலீசார் ஊருக்குள் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

    ஊரே மொத்தமாக காலி செய்து திருப்பதி கோவிலுக்கு புறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ×