என் மலர்
கிருஷ்ணகிரி
- மாணவ மாணவியருக்கு மொத்தம் ரூ.10.4 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
- இதுவரை இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
ஐ.வி.டி.பி தன்னார்வத் தொண்டு நிறுவனம், தன்னலமற்ற சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு ஏழை, எளிய மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதில் பங்காற்றிவருகிறது.
அந்த வகையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.7500-ம், பெற்றோர் இருவரையும் இழந்த மாணவர்களுக்கு தலா.ரூ.10,000-மும் என 135 மாணவ மாணவியருக்கு மொத்தம் ரூ.10.4 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர்குழந்தை பிரான்சிஸ், ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கும் இக்கல்வி உதவித் தொகையைப் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்கி, உயர்ந்த பதவியை அடைந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இதுவரை இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- 2 பேர் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- மேயர் எஸ்.ஏ.சத்யாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஓசூர்,
தமிழ்நாடு மாநில கைப்பந்து அணிக்கான தேர்வு சென்னை எழும்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் மைதா னத்தில் நடைப்பெற்றது
இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வீராங்க னைகள் பங்கேற்ற நிலையில், ஓசூரை சேர்ந்த தனியார் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளான நவ்யாஸ்ரீ, சக்தி ஆகிய 2 பேர் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கைப்பந்து பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- ரூ.20 வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
- முதியவர்களிடமும் லஞ்சம் கேட்கும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி,
தமிழகம் முழுவதும் முதியோர் உதவி தொகை பெறுவோருக்கு வருடம் தோறும் அரசு இலவசமாக வேட்டி , சேலைகள் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சுற்றியுள்ள சில கிராமங்களில் இந்த இலவச வேட்டி , சேலைகளை விநியோகிக்க ஒவ்வொருவரும் ரூ.20 வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்த பகுதிகளில் நேரடியாக வந்து விநியோகிப்பதால் ஏற்படும் பெட்ரோல் செலவுக்காக இந்த தொகையை வசூலிப்பதாக அதிகாரிகள் கூறுவதாக ஓய்வூதியம் பெறுவோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நிரஞ்சன்குமாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தரப்பில் கூறியுள்ளதாவது:-
இப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சுமார் 5,000 ஓய்வூதியம் பெறுவோருக்கு வேட்டி,சேலைகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் இதுவரை 90 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வழங்க முடிந்தது.
தற்போது மீதம் உள்ளவர்களுக்கு கிராம உதவியாளர்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ரூ.20 பணம் கேட்கும் விவகாரம் தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசின் உதவி தொகையை வைத்து வாழ்க்கையை ஓட்டும் முதியவர்களிடமும் லஞ்சம் கேட்கும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
- 6 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்கள் சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். இதில் மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வருவாய்த்துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். மேலும், தேசிய நூலக வாரவிழாவையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து ராஜாராம்மோகன்ராய் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, நூலகர்கள் சாந்தி, பிரேமா, நூலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார், வாசக வட்ட தலைவர் கமலேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் செய்தனர்.
- இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாமல் பள்ளம் சாமல்பள்ளம் அருகே புளியரசியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 26). இவரது மனைவி சக்தி(23). திருணமாகி 7 மாதம் ஆகிறது. ஒடையனுர் எனுமிடத்தில் அண்ணனுடன் தாபா ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
தனது தாய் காசியம்மா வுடன் சத்தியராஜ் இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு செல்ல கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு வந்த லாரி இவர்கள் மீது மோதியதில் தாய் உயிர் தப்பினார்.
சத்தியராஜ் தலை நசுங்கி பலியானார். இதை அறிந்த ஊர் பொதுமக்கள் இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதை அறிந்த எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர்,மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி இறந்தவர் உடலை ஒசூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பகுதியின் அருகே அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகாரிகள் இப்பகுதியில் உடனே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மினி லாரி ஒன்று, வேகமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது.
- 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப் பள்ளி-ஆனேக்கல் சாலையில் மாயசந்திரா அருகே நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வட மாநில கூலித் தொழிலாளர்கள் 3 பேர் வேலையை முடித்து, சாலையில் நடந்தவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று, இவர்கள் மீது வேகமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு அனுப்பி வைத்தனர்.
மேலும் வாகனத்துடன் தலைமறைவாகிவிட்ட மினி லாரி டிரைவரையும் தேடி வருகிறார்கள்.
- புல்லட் வாகனம் திருடு போயிருப்பதை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார்.
- பூட்டை உடைத்து வாகனத்தை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
ஒசூர்,
ஓசூர் அருகே உள்ள உளியாளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (25) இவர் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன் தினம் நண்பர்களோடு ஓசூர் தளி சாலையில் உள்ள ஒரு டீ கடைக்குச் சென்ற விஜய், வழக்கம் போல அந்த கடை முன்பு தனது புல்லட் வண்டியை நிறுத்தி விட்டு தனது நண்பரின் வாகனத்தில் ஏறி நண்பனின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த பகுதிக்கு வந்தபோது கடை முன்பு நிறுத்தி இருந்த தனது 2 லட்சம் மதிப்புள்ள புல்லட் வாகனம் திருடு போயிருப்பதை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அவர் பார்த்தபோது அதில் மர்மநபர் ஒருவர் புல்லட் வாகனத்தின் பூட்டை உடைத்து வாகனத்தை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த கேமரா காட்சிகளை கொண்டு விஜய் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த வாகனத்திற்கு பைனான்ஸ் கட்டாததால், நிதி நிறுவன ஆட்கள் தான் அந்த வாகனத்தை எடுத்து சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வட மாநில கூலித் தொழிலாளர்கள் 3 பேர் வேலையை முடித்து, சாலையில் நடந்தவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
- வாகனத்துடன் தலைமறைவாகிவிட்ட மினி லாரி டிரைவர் தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி - ஆனேக்கல் சாலையில் மாயசந்திரா அருகே நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வட மாநில கூலித் தொழிலாளர்கள் 3 பேர் வேலையை முடித்து, சாலையில் நடந்தவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று, இவர்கள் மீது வேகமாக மோதியது. பின்னர் விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வாகனத்துடன் தலைமறைவாகிவிட்ட மினி லாரி டிரைவரையும் தேடி வருகிறார்கள்.
- ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது.
- பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திருவண்ணாமலை சாலை ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 32). இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகர். இவர் டிஜிட்டல் சேவா மையம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு அருகில் வெங்கடாசலபதி என்பவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடாசலபதி தனது தையல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இரவு 10.30 மணியளவில் அந்த தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இது தொடர்பாக வெங்கடாசலபதிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அறிந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சந்திரசேகரும் கடைக்கு சென்று பார்த்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களுக்கு நீர்வரத்து சரிந்து வந்த நிலையில் பரவலாக பெய்த மழையால் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையில் இருந்து வினாடிக்கு 709 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
மாண்டஸ் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் சாரல் மழை பெய்தது. பின்னர் சாரல் மழை பொழிவு குறைந்து பிற்பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4.30 மணி அளவில் கிருஷ்ணகிரியில் மிதமான மழை பெய்தது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர் காற்றுடன் சாரல் மழை பொழிவு காணப்பட்டது.
இந்நிலையில் மாவட்டத் தில் உள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களுக்கு நீர்வரத்து சரிந்து வந்த நிலையில் பரவலாக பெய்த மழையால் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 576 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 794 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 39.28 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 740 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதே போல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 832 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,083 கனஅடியாக அதிக ரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 709 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 50.50 அடியாக உள்ளது.
- இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை புலி சுற்றித்திரிகிறது.
- கன்றுக்குட்டியை அந்த சிறுத்தை கடித்து கொன்று உள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகில் உள்ள பூத்தனஅள்ளி கிராம பகுதியில் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை புலி சுற்றித்திரிகிறது.
கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு சிறுத்தைப்புலி செல்லும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடும் பீதிய டைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கர்நாடக மாநில வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தைப்புலியின் கால் தடங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர். வனப்பகுதிக்கு மிக அருகே இந்த கிராமம் இருப்பதால் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து ஏற்கனவே தொடர்ந்து வனத்துறை யினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் பன்சுமான் தொட்டி கிராமத்தில் ராஜேஸ் என்ற விவசாயி வளர்த்து வந்த கன்றுக்குட்டியை அந்த சிறுத்தை கடித்து கொன்று உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
- திருமுறைகளில் ஆராதனை செய்து நேற்று மஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
- பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சி எச்சம்பட்டி, ஓடையாண்டஅள்ளி, போடம்பட்டி, குரும்பட்டி, ஏரிசின்ன கானம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு மையப்பகுதியில் ஓபிளி மண்டில் அமைந்துள்ள மண்டு மாரியம்மன் கோவில் புதியதாக புணரமைக்கபட்டு அக விதிகளின்படி திருக்கோவில் நூதன பிம்ப நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வேத ஆகம சாஸ்திர புராணப்படி திருமுறைகளில் ஆராதனை செய்து நேற்று மஹா கும்பாபிஷேகம்
மிக சிறப்பாக நடைப்பெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் ஐந்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்து சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஓபுளி கவுண்டர் சுரேஷ், ஊர்கவுண்டர்கள் எச்சம்பட்டி பொன்னுசாமி, ஒடையாண்டஅள்ளி சுந்தரேசன், போடம்பட்டி பொன்னப்பன், குரும்பட்டி முனியப்பன், ஏரி சின்னகானம்பட்டி ஜெயராமன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
ஒரு மண்டலத்துக்கு தினமும் காலை, மாலை இரு வேளையும் சிறப்பு பூஜை நடைபெறும். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.






