என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கரடி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • கரடி ஒன்று நடமாடியது, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    பன்னேர்கட்டா அருகே ஜிகினி, கல்லுபலு ஆகிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும், ஒரு கோவிலுக்கு அருகிலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று நடமாடியது, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    சமீப நாட்களாக அடிக்கடி இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.

    வனத்துறையினரும் பாதுகாப்பாக இருக்குமாறு கிராம மக்கள் மற்றும் குடியிருப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மகா கும்பாபிஷேக விழா கடந்த 13ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
    • பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி,

    மேகல சின்னம்பள்ளியில் நடந்த வீரபத்திரசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி (எம்.சி.பள்ளி) கிராமத்தில் குருமன்ஸ் பழங்குடி மக்கள் வழிபடும் வீரபத்திரசாமி கோவில் உள்ளது- இந்த கோவிலில் மைலேரி மல்லேஸ்வர சாமி, வீரபத்திசாமி, நீலகிரி சாமி, சித்தப்ப சாமி, மகா கும்பாபிஷேக விழா கடந்த 13ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி அழைத்தல், தம்பட எருதின் தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும், பக்தர்களின் தலைமீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு, வீரகாசி நடன நிகழ்ச்சியுடன், உற்சவ மூர்த்திக்ள திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மேகலசின்னம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    • தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 200.தொகுதிகளுக்கும் மேல் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓசூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், தி.மு.க. அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப்பெற வலியுறுத்தி யும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் -மத்திகிரி கூட்டு ரோட்டில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ஹரீஷ் ரெட்டி தலைமை தாங்கினார். துணை செயலாளர் நவீன் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருக்கும்போது, மகனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டியதன் அவசியம் என்ன?

    முதலமைச்சர், ஊடகங் கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்கிறாரே தவிர வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை. இதுபோன்ற முதல்வரை தேர்ந்தெடுத்ததற்காக, மக்கள் இன்று கவலைப்பட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் இன்றே தேர்தல் நடைபெற்றாலும், 200.தொகுதிகளுக்கும் மேல் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன், ஓசூர் மாநகர பகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா,மஞ்சுநாத்,ராஜி, மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடந்தது.
    • இன்று 181 மனுக்கள் வந்துள்ளது. அதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.

    இதில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரு பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும், மற்றொரு பகுதி மலை கிராமங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. மலை பகுதிகளில் 50 குடும்பங்கள் இருந்தாலே அந்த பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதே போல, நமது மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தொழிற் சாலைகளில் பணியில் சேர்வதற்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியினை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது தனித் திறமையை வளர்த்துக் கொண்டு தமிழக அரசு மூலம் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு, பணி ஆணைகளை பெற்று பயனடைய வேண்டும்.

    குழந்தை திரு மணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாரச்சந்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதும க்களிடமிருந்து 81 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 38 மனுக்களுக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. 9 மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ள நிலையில், 34 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும், இன்று 181 மனுக்கள் வந்துள்ளது. அதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 45 ஆயிரத்து 702 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது அஸ்லம், தோட்ட கலை துறை இணை இயக்குனர் பூபதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • அம்மா உணவகங்கள் மினி மருத்துவமனைகள் மூடல் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மத்தூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, தேவராசன் ஆகியோர் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து விலைவாசி உயர்வான பால் விலை, சொத்துவரி மின் கட்டண உயர்வு, அம்மா உணவகங்கள் மற்றும் மினி மருத்துவமனைகள் மூடல் உள்ளிட்டவை குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளரும், மாவட்ட எம் ஜி.ஆர்.மன்ற செயலாருமான எஸ்.தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் மாவட்ட சிறுபாண்மை பரிவு இணை செயலாளர் பியாரே ஜான், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், இராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், வாலிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா சுந்தரேசன், உள்ளிட்ட நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆண்கள் பெண்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகி மாவட்டம், சூளகிரி தாலுகா சூளகிரி ரவுண்டனாவில் அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ, கே.பி. முனுசாமி, முன்னால் எம்.எல்.ஏ. முனிவெங்கட்டப்பன், மாவட்ட துணை செயலாளர் கலை செல்வி ராமன், சூளகிரி ஒன்றிய குழுதுணைத் தலைவர் மாதேஷ்வரன்,ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாபு, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மாதேஷ், ராமசந்திரன், செல்வம், சுரேஷ், வெங்கடேஷ், மற்றும் ஆண்கள் பெண்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். 

    • பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மண்பானையை மற்றும் மண் அடுப்பை வரும் பொங்கல் திருநாளின் போது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மண்பானை மற்றும் மண் அடுப்பை வழங்கக்கோரி, பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மாநில துணைத் தலைவர் முருசேகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&

    தமிழக அரசு 1,300 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளது. இதில், மக்களுக்கு பயனுள்ளதாகவும், சுகாதாரமானதுமான மண்பானை மற்றம் மண் அடுப்பையும் ரேஷன் கார்டு ஒவ்வொன்றிற்கும் தமிழகம் முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம். மண்பாண்டத் தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது.

    கிருஷ்ணகிரியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலை செய்து வந்த நிலையில் தற்போது 10 பேர் மட்டுமே செய்கின்றனர். இத்தொழில் நிரந்தரமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இத்தொழிலை காக்கவும், பொதுமக்களுக்கு பயன் உள்ளதாகவும் உள்ள மண்பானையை மற்றும் மண் அடுப்பை வரும் பொங்கல் திருநாளின் போது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதை வலியுறுத்தி இங்கே மண் பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி அதன் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் ரோந்து சென்றனர்.
    • லாட்டரி சீட்டுகள், ரூ.21.110 பணம் முதலியவற்றை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கிருஷ்ணகிரி ,

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது அப்பகுதியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அவர்கள் வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், ரூ.21.110 பணம் முதலியவற்றை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    விசாரணையில் அவர்கள் சீனிவாசன் (வயது 40),இம்ரான் (25) என்பதும் தெரியவந்தது.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் பர்கூர் வெங்கடசமுத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பூபதி (51),ரவீந்திரன்(28), கணேசன் (38),விமல் (29)ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.200 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஜவளகிரி வனச்சரகம் சந்திரன் ஏரி சரக பகுதியில் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ராயக்கோட்டை அருகேயுள்ள போடம்பட்டி கிராமத்தை சேர்ந்த குப்புராஜி (வயது 25), சந்திரன் (40), மாது (27), சாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (22) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 16 கிலோ சந்தன மர கட்டைகள் இருந்தன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தன மரங்களை வெட்டி சாக்கு மூட்டையில் எடுத்து செல்வது தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி முன்பு ஆஜர்படுத்தி தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

    • கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தங்களது 8 மாத ஆண் குழந்தையுடன் கடந்த 12-ந்தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.

    மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது புதிய பஸ் நிலையத்தில் கழிவறைக்குச் சென்ற அவர் குழந்தையை முன்புறம் இருந்த இருக்கை ஒன்றில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார்.

    திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. யாரோ மர்மநபர் குழந்தையை அங்கிருந்து கடத்தி சென்று விட்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி தனது கணவர் வெங்கடேசனுக்கு தெரிவித்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
    • சுயதொழில் புரிவோர்கள் நல்ல முறையில் தொழில்கள் மேற்கொள்ள வேண்டும்.
    • ஹவுசிங் போர்டு பகுதியில் திடீரென உயர் மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது.
    • 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

    தேன்கனிக்கோட்டை

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை மற்றும் ஹவுசிங் போர்டு பகுதியில் திடீரென உயர் மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த உயர் மின்னழுத்தம் காரணமாக அப்பகுதியில் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

    தேர்பேட்டையில் வசித்து வரும் நேகா என்பவர் வீட்டில் டி.வி., டியூப்லைட் மற்றும் பல்புகள், அப்சர் என்பவரது வீட்டில் இருந்த டி.வி., டியூப்லைட்கள், ருக்சான் என்பவர் வீட்டில் இருந்த டி.வி., டியூப்லைட்கள், ஷமி என்பவரது வீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டர் ஆகியவை சேதம் அடைந்தன.

    மேலும் ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் பத்மா என்பவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ், டியூப்லைட், சார்ஜர் பொருட்கள் மற்றும் மாதய்யன் வீட்டில் இருந்த டி.வி., டியூப்லைட் அதே பகுதியில் வசிக்கும் காதர் பாஷா என்பவர் வீட்டில் இரண்டு டி.வி. மற்றும் இரண்டு பிரிட்ஜ்கள் என மொத்தமாக அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

    இதனால் வேதனை அடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×