என் மலர்
நீங்கள் தேடியது "Krishnagiri News Bus Stand"
- கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தங்களது 8 மாத ஆண் குழந்தையுடன் கடந்த 12-ந்தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.
மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது புதிய பஸ் நிலையத்தில் கழிவறைக்குச் சென்ற அவர் குழந்தையை முன்புறம் இருந்த இருக்கை ஒன்றில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. யாரோ மர்மநபர் குழந்தையை அங்கிருந்து கடத்தி சென்று விட்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி தனது கணவர் வெங்கடேசனுக்கு தெரிவித்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






