என் மலர்
உள்ளூர் செய்திகள்

உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம்
- ஹவுசிங் போர்டு பகுதியில் திடீரென உயர் மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது.
- 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை மற்றும் ஹவுசிங் போர்டு பகுதியில் திடீரென உயர் மின்னழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த உயர் மின்னழுத்தம் காரணமாக அப்பகுதியில் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
தேர்பேட்டையில் வசித்து வரும் நேகா என்பவர் வீட்டில் டி.வி., டியூப்லைட் மற்றும் பல்புகள், அப்சர் என்பவரது வீட்டில் இருந்த டி.வி., டியூப்லைட்கள், ருக்சான் என்பவர் வீட்டில் இருந்த டி.வி., டியூப்லைட்கள், ஷமி என்பவரது வீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டர் ஆகியவை சேதம் அடைந்தன.
மேலும் ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் பத்மா என்பவரது வீட்டில் இருந்த பிரிட்ஜ், டியூப்லைட், சார்ஜர் பொருட்கள் மற்றும் மாதய்யன் வீட்டில் இருந்த டி.வி., டியூப்லைட் அதே பகுதியில் வசிக்கும் காதர் பாஷா என்பவர் வீட்டில் இரண்டு டி.வி. மற்றும் இரண்டு பிரிட்ஜ்கள் என மொத்தமாக அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
இதனால் வேதனை அடைந்துள்ள அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






