என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன்கார்டுதாரர்களுக்கு மண்பானை வழங்க  மண்பாண்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்
    X

    ரேஷன்கார்டுதாரர்களுக்கு மண்பானை வழங்க மண்பாண்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

    • பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மண்பானையை மற்றும் மண் அடுப்பை வரும் பொங்கல் திருநாளின் போது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மண்பானை மற்றும் மண் அடுப்பை வழங்கக்கோரி, பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மாநில துணைத் தலைவர் முருசேகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&

    தமிழக அரசு 1,300 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க உள்ளது. இதில், மக்களுக்கு பயனுள்ளதாகவும், சுகாதாரமானதுமான மண்பானை மற்றம் மண் அடுப்பையும் ரேஷன் கார்டு ஒவ்வொன்றிற்கும் தமிழகம் முழுவதும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம். மண்பாண்டத் தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது.

    கிருஷ்ணகிரியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலை செய்து வந்த நிலையில் தற்போது 10 பேர் மட்டுமே செய்கின்றனர். இத்தொழில் நிரந்தரமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இத்தொழிலை காக்கவும், பொதுமக்களுக்கு பயன் உள்ளதாகவும் உள்ள மண்பானையை மற்றும் மண் அடுப்பை வரும் பொங்கல் திருநாளின் போது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதை வலியுறுத்தி இங்கே மண் பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி அதன் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×