என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 3 மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
    • காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் விவசாயிகளை துரத்தின.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே மேலுமலை மற்றும் பிக்கனப்பள்ளி வனப்பகு தியில் கடந்த 3 மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த காட்டு யானைகள் கிருஷ்ணகிரி, மேலுமலை சூளகிரி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை நாசம் செய்து வந்தன.

    நேற்று காலை பிக்கனப்ப ள்ளி வனப்பகுதியில் இருந்து எண்ணெகொள் புதூர் கிராமத்தில் புகுந்த 3 காட்டு யானைகள் அப்பகுதியில் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன.

    நேற்று காலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காட்டு யானைகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் விவசாயிகளை துரத்தின.

    தற்போது அந்த 3 காட்டு யானைகளையும் விரட்டும் பணியில் ராயக்கோட்டை வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். காட்டு யானைகளின் அட்டகா சத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் அகலக்கோ ட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுப்பாலம், தேர்வீதி கிராம பகுதிகளில் விவசாயிகளின் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனை அறிந்து உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் சேதமான பயிர்களை பார்வையிட வந்தனர். ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அப்போது வனத்துறை யினருக்கும், விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு உண்டானது. அதன்பிறகு பயிர்கள் சேதமான தோட்ட உரிமையாளர்கள் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து சென்றனர்.

    • ஜூடோ விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
    • குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    கிருஷ்ணகிரி, 

    மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி களில் கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவன் பரிந்திர பவன் திருப்பூரில் நடைப்பெற்ற 11 ஜூடோ விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

    இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கிருத்திகா தெலுங்கா னாவில் நடைபெற்ற 15 வயதுக்குட்ப ட்டோருக்கான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இவர்கள் இருவரும் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிளான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    வயதுக்குட் பட்டோ ருக்கான தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் கூத்தரசன், முதல்வர் அசோக் (ம) ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். மாணவர்களின் பெற்றோர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தோஷ் மற்றும் பார்த்திபராஜ் உடன் இருந்தனர்.

    • திருச்சுவான கொடி ஏற்றமும், வல்லமை விநாயகர் நகர் வலமும் நடந்தன.
    • தீந்த மிழ் வேள்வியும், சிறப்பு பூஜைகள், யாகமும் நடந்தது.

    பர்கூர்,

    கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் 15-ம் ஆண்டு கால பைரவாஷ்டமி விழா தொடங்கி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

    விழா நாட்களில் திரு முறை தீந்தமிழ் வேள்வியும், திருச்சுவான கொடி ஏற்றமும், வல்லமை விநாயகர் நகர் வலமும் நடந்தன.

    நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு, பெரிய புராண பாராயணம், திருவிளக்கு பூஜை, வள்ளி தேவ சேனை உடனுறை முருகன் காவடியாட்டத்துடன் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம், காளி யம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், திருமுறை தீந்த மிழ் வேள்வியும், சிறப்பு பூஜைகள், யாகமும் நடந்தது.

    தொடர்ந்து கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் தலைமையில் பைரவநாதர், திரிபுரபைரவி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

    • 8-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது,
    • மாபெரும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது,

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் ஸ்ரீ காலபைரவர் கோவிலில் 15-ம் ஆண்டு பைரவரஅஷ்டமி பெருவிழா கடந்த 8-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது,

    நாள்தோறும் கோவில் கிராம தெய்வங்கள் வழிப்பாடு, வினாயகர் பெருமாள் நகர்வலம், சுமங்கலி பூஜை, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைப்பெற்றது.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மாபெரும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது,

    இதன் முன்னதாக கந்திகுப்பம் ஸ்ரீ விநாயகர் கோவில் முன்பாக ஸ்ரீ காலப்பைரவர் சுவாமிகளின் தலைமையில் நடைப்பெற்ற இந்த பால்குட ஊர்வலத்தினை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து யானை, ஒட்டகம், குதிரை, எருது உள்ளிட்ட வாகனங்களுடன் பல்வேறு இசை மேளங்களுடன் நடைப்பெற்ற இந்த பால்குடம் ஊர்வலமானது கந்திகுப்பம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றது. இந்த ஊர்வலம், காமராஜர் நகர், செங்கொடி நகர் வழியாக சென்று ஸ்ரீ காலப்பைரவர் ஆலயத்தினை சென்றடைந்தது.

    உலக மக்கள் யாவரும் நலம்முடன் வாழவேண்டி நடத்தப்பட்ட இந்த பால்குட ஊர்வலத்தின்போது ஊர்வலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராமன ஆண்களும், பெண்களும் பால்குடங்களுடன் கலந்துக்கொண்டு ஸ்ரீ காலப்பைரவர் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

    இந்த விழாவின் போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, மாவட்டத்துணைத்தலைவர் சேகர், முன்னால் சேர்மன் ஆறுமுகம், மற்றும் மூத்த வழக்கறிஞர் அசோகன், கோவிந்தசாமி, நகர தலைவர் யுவராஜ், உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடி செலவில் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்ப ட்டுள்ளது.
    • பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பி னராக சேர வேண்டும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பின்படி, 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கரணைகள் ரூ.1 கோடி செலவில் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்ப ட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில், 17 நபர்களுக்கு ரூ.1.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கரணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ண ப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரை ப்பார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பி னராக சேர வேண்டும்.

    பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறணை களுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகிய வற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானியத் தொகைக்கு ட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையலாம்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், முதல் மாடி, கிருஷ்ணகிரி என்ற முகவரியை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 146 விற்பனையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபடுகிறது.
    • முதல் நாள் நேர்காணலில், 471 பேர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 146 விற்பனையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபடுகிறது. இப்பணிக்கு விண்ணப் பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தொடங்கப்பட்டுள்ள நேர்காணல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8,482 பேர் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் நாளொன்றுக்கு, 700 பேர் வீதம் நேர்காணல் நடத்தப்படும்.

    முதல் நாள் நேர்காணலில், 471 பேர் கலந்து கொண்டனர். 229 பேர் கலந்து கொள்ளவில்லை என்றார். கூட்டுறவுதுறையை சேர்ந்த அலுவலர்கள் நேர்காணலை நடத்தினார்கள்.

    • சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் தாசிரிப்பள்ளி ஏரி அமைந்துள்ளது.
    • நீரில் மூழ்கி அழிந்து விடும் என விவசாயிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாடுவனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தாசிரிப்பள்ளி கிராமத்தில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் தாசிரிப்பள்ளி ஏரி அமைந்துள்ளது.

    இந்த ஏரியில் பல வருடங்களாக நீர் இல்லாமல் இருந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக பெய்த கன மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

    இந்த நிலையில் ஏரியில் பல ஆண்டுகளாக மதுகுகள் சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது முழு கொள்ளளவை ஏரி எட்டியுள்ளதால் மதுகுகள் பராமரிப்பின்றி சிதலம் அடைந்துள்ளது.

    இதனால் தற்போது ஏரிக்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியே வருகிறது. தொடர்ந்து இந்த மண்ணரிப்பு அதிகரித்து வருவதால் ஓரிரு நாட்களில் ஏரியின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    உடைந்தால் தாசிரிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழிந்து விடும் என விவசாயிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

    இந்த தகவல் அறிந்து ஏரிக்கரைக்கு வந்த வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள் ஏரிக்கரையை பார்வையிட்டனர்.

    பின்னர் ஏரிக்கரை உடையும் ஆபத்தை தடுக்க ஏரிக்கரையில் மணல் மூட்டைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.

    இருப்பினும் ஏரி கரை உடையும் அபாயம் ஏற்பட்டதால் தாசரிப்பள்ளி மேலூர்கொட்டாய், நெடுஞ்சாலை சுற்று வட்டார கிராம மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

    • கூட்டுறவு விற்பனை சங்கங்கள், ரேஷன்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
    • 4.50 கோடி ரூபாய் அளவில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மற்றும் கெலமங்கலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், ரேஷன்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

    இதில் உத்தனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகர கிளை ஆகியவற்றில் 175 பயனாளிகளுக்கு, 4.50 கோடி ரூபாய் அளவில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு துறையின் குளிர்பதன கிடங்கு, நடமாடும் ஏ.டி.எம். வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம், தருமபுரி மண்டல இணைப்பதிவாளர் ராமதாஸ், தருமபுரிமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சந்தானம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மூன்று பள்ளி மாணவர்கள் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்துள்ளனர்.
    • செல்போன், ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை கண்டதும் எடுத்து சென்று அருகே உள்ள குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான கனகவேல், லோகேஷ், மாதவன் ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்துள்ளனர்.

    அப்போது சாலையில் யாரும் இல்லாத இடத்தில் செல்போன், ஆதார் அட்டை கிடந்துள்ளது. இதை கண்ட பள்ளி குழந்தைகள் கீழே கிடந்த செல்போன், ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை கண்டதும் எடுத்து சென்று அருகே உள்ள குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்களை நேரில் அழைத்து மாணவர்களின் நேர்மையான செயலை பாராட்டினார்.

    மேலும் பள்ளி மாணவர்களின் நேர்மை மற்றும் தைரியத்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கி ஊக்கமளித்தார். பொதுமக்கள், ஆசிரியர்களும் மாணவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
    • நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலை அரசு மகளிர் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் சொத்து வரி, மின் கட்டண உயர்வை, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கண்ணியப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமீர்ஜான் நன்றி கூறினார். 

    • செந்தில்குமாரை கொலை செய்து பாவக்கல் தென் பெண்ணையாற்றில் வீசியதாக கூறியுள்ளனர்.
    • செந்தில்குமாரை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் வட்டாரங்களில் தெரியாதவர்களே இருக்க முடியாது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). முன்னாள் போலீஸ் ஏட்டு. இவருடைய மனைவி சித்ரா (43). இவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் ஜெகதீஷ்குமார் (19).

    செந்தில்குமார், போலீஸ் துறையில் பணியாற்றிய போது பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் முதலில் சஸ்பெண்டு செய்யப்பட்டு, பிறகு போலீஸ் பணியில் இருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

    ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் மாயமானார். இதுகுறித்து அவருடைய தாய் பாக்கியம் கல்லாவி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி மாயமான செந்தில்குமார் மற்றும் அவருடைய மகன் ஜெகதீஷ்குமார், மற்றொருவரின் செல்போன் சிக்னல்கள் ஒரே இடத்தை காட்டியது, பின்னர் அந்த செல்போன் எண்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆனதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செந்தில்குமாரின் மகன் ஜெகதீஷ்குமாருடன் இருந்த மற்றொரு செல்போன் எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் அவர் ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல்லை சேர்ந்த ரவுடி கமல்ராஜ் (37) என்பது தெரிய வந்தது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர்கள் 2-பேரையும் ஊத்தங்கரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வருமாறு சொல்லி இருவரையும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜெகதீஷ்குமார், கமல்ராஜ் ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி ஸ்ரீவத்சவா முன்பு சரணடைந்தனர். அப்போது கடந்த செப்டம்பர் 16-ந் தேதி செந்தில்குமாரை கொலை செய்து பாவக்கல் தென் பெண்ணையாற்றில் வீசியதாக கூறியுள்ளனர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்படி அவர்கள் 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கொலை தொடர்பாக செந்தில்கு மாரின் மனைவியும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருமான சித்ராவிடமும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் விசாரணை நடத்தி வருகிறார்.

    கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் வட்டாரங்களில் தெரியாதவர்களே இருக்க முடியாது. கடந்த 1997-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த செந்தில்குமார் கடந்த 2009-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முரளி என்பவர் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது போலீஸ் வாகனத்தை தொப்பூர் கணவாயில் உருட்டி விட்டுள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதேபோல கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் வாகனம் ஒன்றை பாரூர் ஏரியில் தள்ளி விட்டதாகவும் செந்தில்குமார் மீது புகார் உள்ளது. செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட விவகாரம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • வீடுகள் கட்டி 30 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் மிகவும் பாழடைந்து உள்ளது.
    • தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்திட உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீரன்வட்டம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் சிலர் நேற்று மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா திருவனம்பட்டி கிராமம் அருகே உள்ள வீரன்வட்டம் பகுதியில் 20 தாழ்த்தப்பட்ட சமுதாய குடும்பங்கள் நிலம் இல்லாத விவசாய கூலி தொழிலாளர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு அரசால் கடந்த 1991-1992-ம் நிதி ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் மூலம் இலவச தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் கட்டி 30 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் மிகவும் பாழடைந்து உள்ளது. மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் ஒழுகி வீட்டிற்குள் வருகிறது. இதனால் தொகுப்பு வீடுகள் எந்த நேரம் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

    அதனால் பயனாளிகள் 15 பேருக்கு அரசால் வழங்கப்படும் புனரமைப்பு திட்டத்தின் அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்திட உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 18.8.2022 அன்று மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 5.9.2022 அன்று பரிந்துரைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தொடர் கன மழையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய பயனாளிகளின் குடியிருப்பு களை பாதுகாக்க புனரமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×