என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவர்களை படத்தில் காணலாம்.
விளையாட்டு போட்டியில் கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் சாதனை
- ஜூடோ விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
- குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி களில் கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவன் பரிந்திர பவன் திருப்பூரில் நடைப்பெற்ற 11 ஜூடோ விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கிருத்திகா தெலுங்கா னாவில் நடைபெற்ற 15 வயதுக்குட்ப ட்டோருக்கான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிளான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
வயதுக்குட் பட்டோ ருக்கான தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் கூத்தரசன், முதல்வர் அசோக் (ம) ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். மாணவர்களின் பெற்றோர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தோஷ் மற்றும் பார்த்திபராஜ் உடன் இருந்தனர்.






