என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓசூர் அருகே மினி லாரி மோதி வட மாநில தொழிலாளிகள் 3 பேர் பலி
    X

    ஓசூர் அருகே மினி லாரி மோதி வட மாநில தொழிலாளிகள் 3 பேர் பலி

    • வட மாநில கூலித் தொழிலாளர்கள் 3 பேர் வேலையை முடித்து, சாலையில் நடந்தவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • வாகனத்துடன் தலைமறைவாகிவிட்ட மினி லாரி டிரைவர் தேடி வருகிறார்கள்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி - ஆனேக்கல் சாலையில் மாயசந்திரா அருகே நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வட மாநில கூலித் தொழிலாளர்கள் 3 பேர் வேலையை முடித்து, சாலையில் நடந்தவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று, இவர்கள் மீது வேகமாக மோதியது. பின்னர் விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வாகனத்துடன் தலைமறைவாகிவிட்ட மினி லாரி டிரைவரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×