என் மலர்
உள்ளூர் செய்திகள்

தளி அருகேயுள்ள பூத்தனஅள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை கொன்றது
- இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை புலி சுற்றித்திரிகிறது.
- கன்றுக்குட்டியை அந்த சிறுத்தை கடித்து கொன்று உள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகில் உள்ள பூத்தனஅள்ளி கிராம பகுதியில் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை புலி சுற்றித்திரிகிறது.
கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு சிறுத்தைப்புலி செல்லும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடும் பீதிய டைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கர்நாடக மாநில வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தைப்புலியின் கால் தடங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர். வனப்பகுதிக்கு மிக அருகே இந்த கிராமம் இருப்பதால் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து ஏற்கனவே தொடர்ந்து வனத்துறை யினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் பன்சுமான் தொட்டி கிராமத்தில் ராஜேஸ் என்ற விவசாயி வளர்த்து வந்த கன்றுக்குட்டியை அந்த சிறுத்தை கடித்து கொன்று உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.






