search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே   ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
    X

    தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை யானைகள் சேதப்படுத்தியுள்ள.

    தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

    • யானைகள் தமிழக எல்லையில் பல குழுக்களாக பிரிந்து முகாமிட்டு சுற்றி திரிந்து வருகின்றன.
    • இப்பகுதியில் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தென்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி, தளி ,பாலதோட்ட பள்ளி உள்ளிட்ட கிராம பகுதியில் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் பன்னார் கட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையில் பல குழுக்களாக பிரிந்து முகாமிட்டு சுற்றி திரிந்து வருகின்றன.

    இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேர் வீதி,கும்மளத்தூர், கல்பாலம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று அதிகாலை புகுந்த 35 யானைகள் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்துள்ளது. இதில் மாரப்பா என்பவர் தோட்டத்தில் ரோஜா செடிகளை வளர்த்து விற்பனைக்காக வைத்திருந்தார்.

    அச்செடிகளை காலால் மிதித்து நாசம் செய்துள்ளது இதனால் இப்பகுதியில் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை அடைந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று முகாமிட்டுள்ள 35 யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு அப்பகுதியிலேயே முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×